2022, ஜனவரி 12 அன்று நடைபெறவுள்ள தேசிய இளையோர் விழாவிற்கான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளைப் பகிருங்கள்.
2022, ஜனவரி 12 அன்று 25-வது தேசிய இளையோர் விழாவைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைப்பார். இது சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளாகும். பிரதமரின் உரைக்குத் தங்களின் ஆலோசனைகளைப் பகிர்ந்து கொள்ள இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனைகளில் சிலவற்றைத் தமது உரையில் பிரதமர் சேர்த்துக் கொள்ளக்கூடும்.
இந்த விழாவின் போது பிரதமரின் உரைக்கு நாடு முழுவதும் உள்ள இஞைர்கள் ஆலோசனைகளையும், புதுமையான கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளலாம். இவற்றில் சிலவற்றைத் தமது உரையில் பிரதமர் பகிர்ந்து கொள்ளக்கூடும்.
தேசிய இளையோர் விழா மற்றும் உச்சிமாநாடு பற்றி:
இந்தியாவின் அனைத்து மாவட்டங்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் இளைஞர்கள் கலந்து கொள்ளும் தேசிய இளையோர் விழாவின் நோக்கம் என்பது தேசக்கட்டுமானம் மற்றும் நமது மக்கள் தொகையின் விகிதாச்சாரத்தில் உண்மையான ஆற்றலை வெளிப்படுத்துவதை நோக்கி இளைஞர்களை வலுப்படுத்துதல், தூண்டிவிடுதல், ஒன்றுபடுத்துதல் செயல்படுத்துதல் ஆகும்.
இந்த நூற்றாண்டின் சிந்தனைகளைத் தூண்டிவிடுவதும் மிக முக்கியமாக கொவிடுக்குப் பிந்தைய இளைஞர்களின் ஆற்றலை உலகத்திற்கான இந்திய அதிகாரப்பூர்வ தலைமைத்துவ உத்தியாக உருவாக்குவதும் இந்த விழாவின் நோக்கமாகும்.
ஆழமான மற்றும் ஒன்றுகூடுதல் அணுகுமுறை மூலம் இந்தியாவின் பன்முகக் கலாச்சாரங்களை கொண்டுவந்து, ‘ஒரே இந்தியா, உன்னத இந்தியா’ என்ற ஒன்றுபட்ட நூலில் ஒருங்கிணைப்பது என்ற நோக்கத்துடன் 2022 ஜனவரி 13 அன்று தேசிய இளையோர் உச்சிமாநாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உள்நாட்டில் வளர்ந்து வருகின்ற மற்றும் உலகளாவிய ஆளுமைகள், நிபுணர்களின் அறிவாற்றலை வெளிப்படுத்தி அறிவுத்திறனை வடிவமைக்கும் வகையில், கருத்துப் பரிமாற்றங்களுடன் இளையோர் உச்சிமாநாட்டு அமர்வுகள் நடைபெறும்.
Comment 0