வாருங்கள் !
2018-ல் பிரதமர் நரேந்திர மோடி எழுதியுள்ள ‘தேர்வுப் போராளிகள்’ நூல் மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த இளம் தேர்வுப் போராளி அலீனா தாயங் என்பவர், பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியிருந்த கடிதத்தில் இந்தப் புத்தகத்தை தாம் பெரிதும் விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்குமான சில மந்திரங்களையும் சேர்த்திருக்கலாம் என்று தனது கருத்தைத் தெரிவித்திருந்தார். பிரதமர் நரேந்திர மோடி தமது மனதில் குரல் நிகழ்ச்சியில் இதனைக் குறிப்பிட்டு இந்தப் புத்தகத்தில் மேலும் என்னவெல்லாம் சேர்க்கலாம் என்பது குறித்த கருத்துக்களை அனுப்புமாறு அனைவரையும் கேட்டுக் கொண்டார். தேர்வுகள் தொடர்பான புதிய நோக்குகள், மாணவர்கள் தற்காலத்தில் எதிர்கொள்ளும் சவால்கள், இந்த சவால்களுக்கான தீர்வுகள் போன்றவை எதுவாகவும் இருக்கலாம்.
கீழே தரப்பட்டுள்ள கட்டகத்தில் தங்கள் கருத்துக்களையும் இதர தகவல்களையும் பதிவு செய்து க்ளிக் பொத்தானை அழுத்தவும்.