பங்களாதேஷ் பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் தாரிக் அகமத் சித்திக் பிரதமரை இன்று சந்தித்தார். 2021 மார்ச்சில் தமது பங்களாதேஷ் பயணம் குறித்து நினைவுகூர்ந்த பிரதமர், பிரதமர் ஷேக் ஹசினாவுக்கு நல்வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இந்தியா – பங்களாதேஷ் நட்புறவை வலுப்படுத்தியதற்காகவும், கொவிட்-19 பெருந்தொற்று உள்ளிட்ட நெருக்கடியான காலங்களில் பங்களாதேஷுடன் உறுதியாக நின்றதற்காகவும் பிரதமருக்கு திரு.சித்திக் நன்றி தெரிவித்தார்.