சொர்ண பூமியான தாய்லாந்தில் ஆதித்ய பிர்லா குழுமத்தின் சொர்ண ஜெயந்தி அல்லது பொன்விழாவைக் கொண்டாட நாம் இங்கே கூடியிருக்கிறோம்.
இந்தியா வலுவான கலாச்சாரத் தொடர்புகளைக் கொண்டிருக்கின்ற தாய்லாந்தில் நாம் இருக்கிறோம். இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனத்தின் 50 ஆண்டுகளை இந்த நாட்டில் நாம் கொண்டாடவுள்ளோம்.
இந்தியாவில் தற்போது நிகழ்ந்து வரும் சில ஆக்கப்பூர்வமான மாற்றங்கள் பற்றிய சித்திரத்தை உங்களுக்குத் தர நான் ஆர்வமாக இருக்கிறேன். இதை நான் முழுமையான நம்பிக்கையோடு கூறுகிறேன் – இந்தியாவில் இருப்பதற்கு இது மிகவும் நல்ல நேரம்.
கடந்த ஐந்தாண்டுகளில் பல்வேறு துறைகளில் இந்தியா பல வெற்றிகளைக் கண்டிருக்கிறது. இதற்குக் காரணம் அரசுகள் மட்டுமல்ல. வழக்கமான அதிகார வர்க்கப் பாணியில் செயல்படுவதை இந்தியா நிறுத்தியுள்ளது.
ஏழைகளுக்கு செலவிடப்பட்ட பணம், பல ஆண்டுகளாக உண்மையில் அவர்களைச் சென்றடையவில்லை என்பதை அறிந்தால் நீங்கள் அதிர்ச்சி அடையக்கூடும். இந்தக் கலாச்சாரத்தை எமது அரசு முடிவு கட்டியதற்கு டிபிடி-க்கு நன்றி சொல்ல வேண்டும். டிபிடி என்றால் நேரடிப் பயன் பரிமாற்றம். தரகர்கள் மற்றும் திறன் இன்மை கலாச்சாரத்திற்கு டிபிடி முடிவு கட்டியது.
வரி நிர்வாகத்தில் மேம்பாடு
இன்றைய இந்தியாவில் கடுமையாக உழைத்து வரிசெலுத்துவோரின் பங்களிப்பு நேசத்திற்குரியதாக உள்ளது. நாங்கள் குறிப்பிடத்தக்க வகையில் பணியாற்றிய ஒரு துறை வரிவிதிப்பாகும். மக்களுக்கு இணக்கமான வரி நிர்வாகத்தைக் கொண்டதாக இந்தியா இருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இதனை மேலும் மேம்படுத்த நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.
முதலீட்டுக்கு மிகவும் ஈர்ப்புடையது இந்தியா
முதலீட்டுக்கு உலகிலேயே மிகவும் ஈர்ப்பான பொருளாதாரமாக இந்தியாவை இப்போது நாங்கள் உருவாக்கியிருக்கிறோம் என்று நான் கூறுகிறேன். கடந்த ஐந்தாண்டுகளில் இந்தியா 286 பில்லியன் அமெரிக்க டாலர் வெளிநாட்டு நேரடி முதலீட்டைப் பெற்றுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள மொத்த வெளிநாட்டு நேரடி முதலீட்டில் இது ஏறத்தாழ பாதியளவாகும்.
5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரம் என்ற கனவு தொடர்கிறது
5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக மாறுவது என்ற மற்றொரு கனவை இந்தியா தற்போது மேற்கொண்டுள்ளது. 2014-ல் எனது அரசு பொறுப்பேற்ற போது, இந்தியாவின் ஜிடிபி 2 லட்சம் கோடி டாலராக இருந்தது. 65 ஆண்டுகளில் 2 லட்சம் கோடி. ஆனால், வெறும் ஐந்தே ஆண்டுகளில் அதனை 3 லட்சம் கோடி டாலராக அதிகரித்தோம்.
நான் சிறப்பாகப் பெருமிதம் கொள்ளும் விஷயம் ஒன்று என்றால், அது இந்தியாவின் அறிவுத் திறனும், தொழில் தினமும் கொண்ட மனித மூலதனமாகும். உலகின் மிகப்பெரியப் புதிய தொழில் தொடங்கும் சூழல் கொண்டதாக இந்தியா இருப்பது வியப்பில்லை.
இந்தியா வளம் பெறும்போது, உலகம் வளம் பெறும். இந்தியாவின் வளர்ச்சிக்கான உங்களின் தொலைநோக்கு அந்த வகையிலேயே உள்ளது. இது மிகச் சிறந்த புவிக்கோளுக்கும் வழிவகுக்கும்.
கிழக்காசிய செயல்பாட்டுக் கொள்கை
எங்களின் கிழக்காசிய செயல்பாட்டுக் கொள்கை உணர்வோடு இந்தப் பகுதியில் தொடர்பை விரிவாக்குவதில் நாங்கள் தனிக்கவனம் செலுத்தி வருகிறோம். தாய்லாந்தின் மேற்குக் கடற்கரை மற்றும் துறைமுகங்கள் இந்தியாவின் கிழக்குக் கடற்கரை இடையே நேரடித் தொடர்பு என்பது நமது பொருளாதாரப் பங்கேற்பை விரிவுபடுத்தும்.
முதலீடு செய்வதற்கும், எளிதான வர்த்தகத்திற்கும் இந்தியாவுக்கு வாருங்கள். புதிய கண்டுபிடிப்புக்கும், தொழில் தொடங்குவதற்கும் இந்தியாவுக்கு வாருங்கள். சிறந்த சுற்றுலாத் தலங்களையும், மக்களின் அன்பான விருந்தோம்பலையும் அனுபவிக்க இந்தியாவுக்கு வாருங்கள். விரிந்த கரங்களுடன் உங்களுக்காக இந்தியா காத்திருக்கிறது.
Congratulations to the @AdityaBirlaGrp for 50 years of their global presence. Watch from Bangkok. https://t.co/acZs7WDH38
— Narendra Modi (@narendramodi) November 3, 2019
For investment and easy business, come to India.
— PMO India (@PMOIndia) November 3, 2019
To innovate and starting up, come to India. To experience some of the best tourist sites and warm hospitality of people, come to India. India awaits you with open arms: PM @narendramodi pic.twitter.com/01ytLQfxm8