இன்று நாட்டின் பெரும் புரட்சியாளர்களை கௌரவிக்கும் நாள் ஆகும்.
நாட்டிற்காக தியாகங்களை செய்த, பாரதத் தாயின் வீர புதல்வர்களான பகத் சிங், சுக்தேவ் மற்றும் ராஜகுரு ஆகியோர்களை நான் தலை வணங்குகிறேன்.
இவர்களுடன் சிறந்த சிந்தனையாளரும், ஆழமான தேசபக்தியும் கொண்ட டாக்டர் ராம் மனோகர் லோஹியா அவர்கள் பிறந்த தினத்தில் அவரையும் தலை வணங்குகிறேன்.
சிறந்த அறிவாற்றல் நிறைந்த டாக்டர் லோஹியா, அரசியல் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில், நாட்டின் உயர் தலைவர்கள் கைது செய்யப்பட்டபோது, இளம் லோஹியா, இயக்கத்தின் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். சுதந்திர இயக்கத்தின் தீவிரம் குறையாமல் இருக்க தலைமறைவாக இருந்து, அவர் வானொலி சேவையை நடத்தி வந்தார்.
கோவா சுதந்திர போராட்ட வரலாற்றில், டாக்டர் லோஹியாவின் பெயர் பொன் எழுத்துக்களில் பொறிக்கப்பட்டுள்ளது.
ஏழைகள், ஒடுக்கப்பட்டவர்கள் ஆகியோர் பாதிக்கப்படும் போது, அவர்களுக்கு உதவி செய்ய டாக்டர் லோஹியா அங்கே இருப்பார்.
டாக்டர் லோஹியாவின் கருத்துக்கள் இன்றும் நம்மை ஊக்குவிக்கின்றன. விவசாயத்தை நவீனப்படுத்துதல் தொடர்பாக அவர் அதிகம் எழுதியுள்ளார். அவரின் சில கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு, என்டிஏ அரசு விவசாயிகள் நலனுக்காக, பிரதம மந்திரி விவசாய உதவி நிதி, வேளாண் நீர்ப்பாசனத் திட்டம், e-Nam, சுகாதார அட்டை மற்றும் இதர திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
சமூகத்தில் நிலவும் வேறுபாடுகள், மற்றும் ஆண் பெண் வேறுபாடுகள் குறித்து டாக்டர் லோஹியா மிகவும் கவலை கொண்டார். எங்களது கொள்கையான ‘‘சப்கா சாத், சப்கா விகாஸ்’’ என்ற கொள்கை மற்றும் கடந்த ஐந்து ஆண்டுகளில் நாங்கள் நிறைவேற்றிய பணிகள், டாக்டர் லோஹியாவின் கனவை குறிப்பிடத்தக்க அளவு நிறைவேற்றும் வகையில் உள்ளன. டாக்டர் லோஹியா தற்போது உயிருடன் இருந்தால், என்டிஏ அரசின் பயணிகள் குறித்து பெருமை அடைந்து இருப்பார்.
டாக்டர் லோஹியா நாடாளுமன்றத்துக்கு வெளியே பேசும்போதெல்லாம், காங்கிரஸ் அரசு அஞ்சுவது தெளிவாக தெரிந்தது.
காங்கிரஸ் கட்சி, நாட்டை வலுவிழக்கச் செய்வதாக டாக்டர் லோஹியா நினைத்தார். 1962 ஆம் ஆண்டில் அவர், நாட்டில் வேளாண், தொழில்துறை ராணுவம், ஆகிய எந்த துறையிலும் எவ்வித முன்னேற்றமும் இல்லை என்று தெரிவித்தார்.
அதன்பின் வந்த காங்கிரஸ் அரசுகளுக்கும் இது பொருந்தும். பின்னர் ஏற்பட்ட காங்கிரஸ் ஆட்சியில், விவசாயிகள் மற்றும் தொழில் துறையினர் (காங்கிரஸ் கட்சித் தலைவர்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களை தவிர) பாதிக்கப்பட்டனர் மற்றும் தேச பாதுகாப்பில் கவனம் செலுத்தப்படவில்லை.
டாக்டர் லோஹியா விற்கு, காங்கிரஸ் கொள்கைகள் மீதான எதிர்ப்பு உணர்வு ஏற்பட்டது. 1967 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில், டாக்டர் லோஹியாவின் முயற்சி காரணமாக காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. அந்த நேரத்தில், ஹவுரா- அம்ருதஸர் ரயில் மூலம் பயணம் செய்யும் போது, காங்கிரஸ் ஆட்சி அல்லாத மாநிலங்கள் வழியாக பயணம் செய்ய இயலும் என திரு.அடல் பிஹாரி வாஜ்பார் கூறினார்.
இன்றைய அரசியல் நிலையை பார்க்கும் நிலை டாக்டர் லோஹியாவிற்கு ஏற்பட்டால், அவர் இதைப் பார்த்து மனது மிகவும் வருத்தப்படுவார்.
டாக்டர் லோஹியாவின் கருத்துக்களை நாங்கள் பின்பற்றுவதாகக் கூறும் கட்சிகள், அவரது கொள்கைகளை முற்றிலுமாக புறக்கணித்து விட்டன. இவர்கள் டாக்டர் லோஹியாவை அவமானப்படுத்தும் எந்தவிதமான சந்தர்ப்பத்தையும் விட்டுவைப்பதில்லை.
ஒடிசாவின், சோஷலிச மூத்த தலைவரான, திரு.சுரேந்திரநாத் த்விவேதி, ‘‘ஆங்கிலேயர் ஆட்சியின்போது, டாக்டர் லோஹியா சிறையில் அடைக்கப்பட்டதை விட, காங்கிரஸ் அரசு, அவரை அதிக முறை சிறையில் அடைத்துள்ளது’’ என குறிப்பிட்டுள்ளார்.
லோஹியா கொள்கைகளுக்கு ஆதரவானவர்கள் என்று கூறிக்கொள்ளும் கட்சிகள், இன்று காங்கிரசுடன் இணைந்து, ஒரு கபடமான மகா கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் உள்ளனர். இந்த நடவடிக்கை கேலிக்கூத்தானது மற்றும் கண்டிக்கத்தக்கது.
வாரிசு அரசியல், இந்தியாவின் ஜனநாயகத்திற்கு மிகவும் ஆபத்தானது என்று டாக்டர் லோஹியா நினைத்தார். இன்று அவர் கொள்கைகளை கடைபிடிப்பவர்கள், தங்கள் குடும்ப நலனிற்கு முக்கியத்துவம் அளிப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது.
சமத்துவ மனப்பான்மையுடன் செயல்படும் ஒருவர் யோகியைப் போன்றவர் என்று டாக்டர் லோகியா நம்பினார். இன்று அவரது கொள்கையைப் பின்பற்றுவதாகக் கூறும் கட்சிகள், அவரது கொள்கைகளை மறந்து விட்டு, அரசியல் ஆதாயம், தன்னலம், சுரண்டல் ஆகியவற்றின் மீது நம்பிக்கை வைத்துள்ளன. இவர்கள் அதிகாரத்தின் மூலம், பொது மக்கள் சொத்துக்களை சுரண்டுவதில் வல்லவர்களாக உள்ளனர். மேலும் இவர்களது ஆட்சியில், ஏழைகள், தலித்துகள், பின்தங்கிய மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பாதுகாப்பாக உணர்வதில்லை. ஏனென்றால் இக்கட்சிகள், குற்றம் செய்தவர்களுக்கும் சமூகவிரோதிகளுக்கும் பாதுகாப்பு அளித்து வருகின்றன.
டாக்டர் லோஹியா, ஆண் பெண் சமத்துவம் இருக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். ஆனால் வாக்கு வங்கி அரசியலுக்காக செய்யப்படும் அரசியல், இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. இதனால் தான், லோஹாவின் கொள்கைகளை ஆதரிப்பதாக கூறும் கட்சிகள், இன்றைய அரசு, முத்தலாக் நடைமுறையை முடிவுக்கு கொண்டு வருவதை எதிர்த்தது.
டாக்டர் லோஹியாவின் கொள்கைகளை பின்பற்றுகின்றனரா அல்லது வாக்கு வங்கி அரசியலை பின்பற்றுகிறார்களா என்பதை இந்த கட்சிகள் தெளிவு படுத்துவார்களா?
இன்று 130 மில்லியன் இந்தியர்கள் ஒரே கேள்வியைத்தான் கேட்கின்றனர் - டாக்டர் லோஹியாவின் கொள்கைகளுக்கு எதிராக செயல்படுபவர்கள் நாட்டு மக்களுக்கு எவ்வாறு சேவையாற்ற முடியும்?
உண்மையில், லோகியா கொள்கைகளை கடைப்பிடிப்பதாக கூறி ஏமாற்றுபவர்களை, நாட்டு மக்கள் எப்போதும் ஏமாற்றுவார்கள்.