பீகார் மாநிலத்தின் மதுபானி மாவட்டத்தில், பென்னிபட்டி அருகே 19-9-2016 அன்று நடந்த பேருந்து விபத்திலும், பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் மாவட்டத்தை சேர்ந்த அட்டாரியில் உள்ள முஹாவா கிராமத்தின் அருகே 20-9-2016 அன்று நடந்த பேருந்து விபத்திலும் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த செய்தியை அறிந்து பிரதமர் திரு. நரேந்திர மோடி மிகவும் வருத்தமடைந்தார். இந்த விபத்துகளில் உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் மற்றும் பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 கருணை தொகையாக வழங்குமாறு ஒப்புதல் அளித்துள்ளார். இந்த கருணை தொகை பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து அளிக்கப்படும்