அடையாள சின்னமான காசி விஸ்வநாதர் வளாகம் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் புத்துணர்ச்சியூட்டும் புதிய சகாப்தத்தை கண்டுள்ளது.
இந்தியாவின் புனித நகரங்களில் ஒரு நகரின் புனித கோயில்களில் ஒன்று அதன் பிரம்மாண்டமான வரலாற்றுக்கு பொருத்தமான பாரம்பரிய வழித்தடத்தை தற்போது பெற்றுள்ளது.
கோயிலை சுற்றிலும் உள்ள பரந்தவெளியை அடையும் பிரம்மாண்டமான நுழைவு வாசலில் ஒரே சமயத்தில் ஆயிரம் பேர் செல்ல முடியும். சிக்கலான வடிவில் இருந்த சுவர்கள் அகற்றப்பட்டு கங்கைக்கு அகலமான பாதை அமைக்கப்பட்டுள்ளது. பாபா விஸ்வநாதரின் கோயில் மாற்றமடைந்துள்ளது.
கூடுதல் நவீன வசதிகளுடன் காசி விஸ்வநாதர் ஆலய வளாகம் பழமை மற்றும் நவீனத்துவத்தின் சரியான கலவையாக திகழ்கிறது.
இந்தப் படங்கள் மூலம் திவ்ய காசி, பவ்ய காசியின் தெளிவான தோற்றம் தெரிகிறது.