நல்ல மாநில இணைப்புகள், பிராந்திய பொருளாதார வளர்ச்சிக்கும், வேலை வாய்ப்பு உருவாக்கத்துக்கும் உந்துதலாக உள்ளது. மேலும், இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களை இணைப்பது, அதிகமான மக்களை விமான சேவை வலைக்குள் கொண்டுவந்து, ஒரு வலை அமைப்பை உருவாக்கிறது. புதிய பயணிகள் மூலம் இந்த சங்கிலி தொடர் முழுவதும் பொருளாதார வளர்ச்சி உருவாகிறது: புதியதாக இணைக்கப்பட்ட நகரங்களுக்கு, ஏற்கனவே செயல்பாட்டில் இருக்கும் விமான நிலையங்களுக்கு மற்றும் விமான சேவை நிறுவனங்களுக்கு. இது வணிகத்தை மேலும் திறனுள்ளதாக ஆக்குகிறது, இந்தியாவின் பரந்த சுற்றுலா துறை வளர்ச்சி வாய்ப்புக்கு துணை புரிகிறது, அவசர மருத்துவ உதவியை மேம்படுத்தி, சாத்தியமாக்குறது, தேசிய ஒருமைப்பாட்டை வலுவாக்குகிறது.
உதான் (உடே தேஷ் கா ஆம் நாகரிக் - அதாவது சாமானிய மக்களின் வான் வழி போக்குவரத்து) திட்டம், வளர்ச்சிக்கு சாத்தியக்கூறு உள்ள பிராந்திய வழிதடங்களின் லாபத்தன்மையை மேம்படுத்தி, பிராந்திய வான்வழி போக்குவரத்து சந்தையில் கால் பதிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உதான், அமெரிக்கா, கனடா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் உள்ள திட்டங்கள் போன்றே, உலக தரத்திற்கு இணையான கொள்கைகளை கொண்டது. புதிய பிராந்தியங்களில், இந்தியாவின் விமான சேவை சந்தையில் அதிக பட்ச ஆளுமை திறனுக்கு, குறைந்தபட்ச அரசு தலையீடு அடித்தளம் அமைக்கிறது.
புதிய பிராந்தியங்களில், இந்தியாவின் விமான சேவை சந்தையில் அதிகபட்ச ஆளுமை திறனுக்கு, குறைந்தபட்ச அரசு தலையீடு அடித்தளம் அமைக்கிறது.
வழிதட லாபத்தை ஊர்ஜிதப்படுத்தி, உதான் புதிய இணைப்புகளை உருவாக்குகிறது
விமான சேவை பெற முடியாத இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகர பிரஜைகள் மத்தியில் மாநில தலைநகரங்களுக்கு, பிராந்திய அல்லது மெட்ரோ நகரங்களுக்கு, அயல் நாடுகளுக்கு சிறப்பான, வேகமான போக்குவரத்துக்கு வசதிக்கு மறைமுகமான தேவை உள்ளது. ஆயினும், விமான சேவை வணிகம் அதிக இயக்க செலவினங்களை உள்ளடக்கியது. இதில் விமான கேப்பிடல் கட்டணங்கள், விமான நிலைய கட்டணங்கள், கேபின் க்ரூ, எரி பொருள் மற்றும் பராமரிப்பு செலவினங்கள் அடங்கும். போதுமான விமான போக்குவரத்து இருந்தால் மட்டுமே, விமான சேவை நிறுவனங்களால் தேவையான வருவாயை ஈட்டி, இயக்க செலவினங்களை ஈடு செய்து, முதலீட்டுச் செலவுகளை மீட்க முடியும். லாபம் தராத வழிதடங்களில் விமான சேவை நிறுவங்கள் தங்கள் விமானங்களை இயக்குவதில்லை என்பது வெளிப்படையான விஷயம்.
விமான சேவை தொடர்பான அனைத்து தரப்பினரிடமும் பலமுறை விவாதங்கள் நடத்தப்பட்டு, பயணிகளுக்கும், விமான சேவை நிறுவனங்கள் இரு தரப்பினருக்கும் வெற்றி வாய்ப்பை உருவாக்கும் விதமாக, உதான் திட்டம் உருவாக்கப்பட்டது. அவர்களுடைய நகரங்களில், ஒரு மணி நேரத்துக்கு ரூபாய் 2,500 செலவிட்டு, பயணிகள் விமான சேவையை பயன்படுத்தலாம். பலவித சந்தை வாய்ப்பு ஆய்வுகளுக்கு பிறகு, விமான சேவை நிறுவனங்களாலேயே இணைக்கப்படும் வழிதடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. உலக அளவில், (அ) வழிதட லாபம் மற்றும் (ஆ) சந்தை சார்ந்த இயக்கத்தை அறிமுகப்படுத்தி, மானியம் அளிப்பது - இவற்றை அடிப்படையாக கொண்டு அறிமுகப்படுத்தப்படும் உலக அளவில் உதான் முதல் வகையான திட்டமாகும்.
வழிதட லாபத்தை ஊர்ஜிதப்படுத்த உதான் மூன்று நிலைகளில் இயங்குகிறது: (1) குறிப்பிடத்தக்க அளவு இயக்க செலவினங்களை குறைப்பது (2) பாதி எண்ணிக்கை இருக்கைகளுக்கு சந்தை-கண்டறிந்த மானியம் அளிப்பது (3) வழிதடங்களுக்கு மூன்று வருட பிரத்யேக உரிமை. விமான டர்பைன் எரிபொருள் (ATF) வரியை குறைப்பது மற்றும் உதான் வழிதடங்களுக்கு விமான நிலைய கட்டணங்களை நீக்குவது, மாற்றியமைக்க கூடிய பிராந்திய விமான (பொதுவாக 40 டன்கள் குறைவான, 80 இருக்கைகளுக்கும் குறைவான டர்போ-ப்ராப்ஸ்) லீஸிங் சந்தை, குறைவான முதல் நிலை செலவினங்கள் செய்து புதிய விமானங்களை இயக்க பிராந்திய விமானங்களுக்கான DGCA வழிமுறைகளை ஒழுங்குபடுத்துதல், போன்றவற்றின் மூலம் இயக்க செலவினங்கள் குறைக்கப்படுகிறது.
உதானுக்கு முன்பு, இந்தியாவில் [75] விமான நிலையங்கள் இயக்கத்தில் இருந்தன. ஒரே திட்டத்தில், 27 தற்போதைய செயல்படும் விமான நிலையங்கள், 12 தற்போதைய முழுவீச்சில் செயல்படாத விமான நிலையங்கள் மற்றும் 31 தற்போதைய செயல்படாத விமானநிலையங்கள் (மொத்தமாக 70 விமான நிலையங்கள்) 27 உதான் முன்மொழிந்துள்ள திட்டங்கள் மூலம் இணைக்கப்படும்.
உதான் சந்தை-சார்ந்த அணுகுமுறை மூலம் மானிய அளவுகளை நிர்ணயிக்கிறது. பலவிதமான விமான சேவை துறையின் தரவுகள் கொண்டு மதிப்பீடு செய்யப்படும் இயக்க செலவினங்கள் அடிப்படையில், மானிய அளவுகளின் அதிகபட்சம் நிர்ணயிக்கப்படுகிறது. விமானத்தின் பாதி இருக்கை எண்ணிக்கைக்கு குறைந்த பட்ச மானியத்தை ஏலம் கேட்கும் ஏலங்கேட்பவர்க்கு, வழிதடம் ஒதுக்கப்படும். இந்த மானியம் வழங்கப்பட்ட இருக்கைகள், மாறுபாடும் கட்டணத்தின் அடிப்படையில், அதாவது 30 நிமிட விமான பயணத்துக்கு ரூபாய் 1,500 மற்றும் 60 நிமிட விமான பயணத்துக்கு ரூபாய் 2500, என்ற வகையில் கட்டணங்கள் நிர்ணயிக்கப்படும். விமானத்தில் உள்ள மீதி பாதி இருக்கைகளை சந்தை விலைக்கு விற்கலாம். இறுதியாக, வெற்றி பெற்ற ஏலங்கேட்பவர் அந்த வழிதடத்தில் மூன்று-வருட பிரத்யேக உரிமையை பெறுவார். இது அவர்கள் அந்த வழிதடத்தை சிறப்பாக மேம்படுத்த ஊக்குவிக்கும். மானியங்கள் தேவையில்லை - செலவினங்களை குறைப்பது மற்றும் வழிதடங்களுக்கு பிரத்யேக உரிமை அளிப்பதே இந்த சந்தையில் இறங்க போதுமானது என்று பல விண்ணப்பங்கள் வந்திருப்பது, உற்சாகத்தையும், நம்பிக்கையையும் அளிக்கிறது.
உதானுக்கு முன்பு, இந்தியாவில் [75] விமான நிலையங்கள் இயக்கத்தில் இருந்தன. ஒரே திட்டத்தில், 27 தற்போதைய செயல்படும் விமான நிலையங்கள், 12 தற்போதைய முழுவீச்சில் செயல்படாத விமான நிலையங்கள் மற்றும் 31 தற்போதைய செயல்படாத விமானநிலையங்கள் (மொத்தமாக 70 விமான நிலையங்கள்) 27 உதான் முன்மொழிந்துள்ள திட்டங்கள் மூலம் இணைக்கப்படும்.
6X: ஒரு நல்ல கொள்கையின் உந்து சக்தி
அமெரிக்கா, கனடா, ப்ரேஜில் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற பெரிய நாடுகள் பிராந்திய இணைப்பை, பொது மக்கள் நிதி ஆதாரம் மூலம், ஊக்குவிக்கிறது. பிராந்திய இணைப்புக்கு நிதி அளிக்க, விமானங்களின் மெட்ரோ ரூட்களில் குறைந்த அளவு கட்டணத்தை விதிக்கும் முதல் வகையான திட்டமாக உதான் உள்ளது. பெரிய வழிதடங்களில் விதிக்கப்படும் கட்டணங்களின் மூலம் வருடத்துக்கு ரூபாய் 500 கோடிகள் வசூலாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது (அல்லது US$ 75 மில்லியன்). இது தோராயமாக அமெரிக்க அரசாங்கம் 2016-ல் அத்தியாவசிய விமான சேவைகளை மேம்படுத்த செலவு செய்த மதிப்பீடு தொகையான US$ 290 மில்லியனில், நான்கில் ஒரு பங்காகும்.
பயணிகள் மேம்பட்ட விமான சேவைகள் மூலம் பயனடைவார்கள், விமான சேவை நிறுவனங்கள் தங்கள் மெட்ரோ வழிதடங்களில் அதிக பயணிகளை ஈர்ப்பார்கள், இந்தியா வேகமான பொருளாதார வளர்ச்சியாலும், தேசிய ஒருமைப்பாட்டாலும் பயனடையும்.
உதானின் முதல் ஏலத்தில், 27 விண்ணப்பங்கள் வந்துள்ளன. அவை, உதான் விமானங்களில் 13 லட்ச இருக்கைகளை அளிக்க ஆண்டுக்கு வையபைலிட்டி கேப் ஃபண்டிங் (VGF) ஆக ரூபாய் 205 கோடிகளை கோரியுள்ளன. 2016-ல் 15 கோடி டிக்கெட்டுகள் விற்கப்படுள்ளதன் அடிப்படையில் (10 கோடி உள்நாடு, 5 கோடி வெளிநாடு), இந்த திட்டம் 0.87% கூடிதல் கொள்ளளவை உருவாக்கும். இந்த ஆண்டு, விமான போக்குவரத்து சந்தை ரூபாய் 150,000 கோடி அளவு இருக்கும் (ரூபாய் 50,000 கோடி உள்நாடு, ரூபாய் 1 லட்சம் கோடி வெளிநாடு) என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது உதான் கட்டணம் (இந்த சுற்று ஏலத்திற்கு) விமான போக்குவரத்து துறையின் மொத்த வருவாயில் 0.13% ஆக இருக்கும் என்பதை காட்டுகிறது.
சந்தைக்கு-தோதான கொள்கை ஒரு துறையின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க உந்துதலை அளிக்கும். விமான கவரேஜ்-ஐ அதிகரிக்க இரண்டாம்-ஆர்டர் மற்றும் நெட்வொர்க் தாக்கங்களை கணக்கில் எடுக்காமல் கூட, விமான சூழ் மண்டலத்தின் இடையே (ecosystem) வள ஆதாரங்களின் 0.13% மறு ஒதிக்கீட்டில், 0.87% கூடுதல் கொள்ளளவு என்பது ஒரு நல்ல கொள்கையின் 6X உந்து சக்தியை வெளிப்படுத்துகிறது.
குறைந்தபட்ச அரசு தலையீடு, சந்தை சார்ந்த அணுகுமுறை
வருடத்துக்கு இரண்டு முறை உதான் வழிதடங்களுக்கு ஏலம் நடத்தப்பட வேண்டும். ஏலத்துக்கு விடப்பட்டுள்ள வழிதடங்களை அரசாங்கம் முடிவு செய்யாது: இது விமான சேவை நிறுவனங்களாலேயே, அவர்களுடைய தேவை ஆய்வின் படி, முடிவு செய்யப்படும். இது உதான் திட்டத்தின் தனித்துவமான அம்சம். விமான சேவை நிறுவனங்கள், ஒரு குறிப்பிட செக்டார் அல்லது நெட்வொர்க்குக்கு VGF ஏலம் கேட்ட பின், மானிய அளவை குறைக்க, நிலவும் சந்தை கூறுகள் மானிய கேட்பை குறைக்குமா என்பதை கண்டறிய, அந்த வழிதடங்கள் எதிர்-ஏலத்துக்கு திறக்கப்படும்.
உதானின் அதிகபட்ச தாக்கத்துக்கு, குறைந்தபட்ச அரசாங்க தலையீடு, நிச்சயம்”ஹவாய் சப்பல் போட்ட பிரஜைக்கும், ஹவாய் ஜகாஸ் (விமானம்) என்ற பிரதமரின் கனவை சாத்தியமாக்கும்.
பல உதான் ஏலத்தின் மூலம், விமான சேவை சூழ்மண்டலம் (ecosystem) எந்த வழிதடம் நன்முறையில் இயங்குகிறது, எந்த வழிதடம் சரியாக இயங்கவில்லை என்ற தரவுகள் கிடைக்கும். வழிதடங்கள், விமான சேவையை வழங்கும் நிறுவனங்களின் சேவை தொடக்கம் மற்றும் நிறுத்தம், ஒரு துடிப்புள்ள சந்தையை உருவாக்கும். பிராந்திய வான்வழி போக்குவரத்து சந்தையில் உள்ள சவால்கள் மற்றும் வாய்ப்புகளை புரிந்து கொள்ள வழிவகுக்கும். ஒரு குறிப்பிட்ட விமான வகையின் மூலம் தேவையை சரிவர நிறைவேற்ற முடியாத சில வழிதடங்களில், அதனினும் சிறிய அல்லது பெரிய விமானங்கள் மூலம், வேறு விதமான இணைப்பு அல்லது நேர மாறுதலின் மூலம், தேவையை சரியாக நிறைவேற்றலாம். ஒழுங்குமுறை வடிவமைப்பில் தேவைப்படும் மாற்றங்கள் குறித்து புதிய புரிதல்களுக்கு அது வழிவகுக்கும். பரிசோதனையை அனுமதிக்கும் மறுசெய்கை (iterative) அணுகுமுறை, சிறந்த பிராந்திய விமான சேவையை உருவாக்க உறுதியான அடித்தளம் அமைக்கும்.
அரசாங்கம் மக்களின் எதிர்ப்பார்ப்பை நிறைவேற்ற ஒரு விமான சேவை துறைக்கு உதவும் வகையில் செயல்படும். உதான் பிராந்திய வான்வழி இணைப்பை ஏற்படுத்தி, ஒட்டுமொத்த வான்வழி இணைப்பை பலப்படுத்த, நியாயமான சந்தை-வெளிப்படுத்தும் விலையில் தொடங்கும். பயணிகள் மேம்பட்ட விமான சேவைகள் மூலம் பயனடைவார்கள், விமான சேவை நிறுவனங்கள் தங்கள் மெட்ரோ வழிதடங்களில் அதிக பயணிகளை ஈர்ப்பார்கள், இந்தியா வேகமான பொருளாதார வளர்ச்சியாலும், தேசிய ஒருமைப்பாட்டாலும் பயனடையும். உதானின் அதிகபட்ச தாக்கத்துக்கு, குறைந்தபட்ச அரசாங்க தலையீடு, நிச்சயம் “ஹவாய் சப்பல் போட்ட பிரஜைக்கும், ஹவாய் ஜகாஸ் (விமானம்) என்ற பிரதமரின் கனவை சாத்தியமாக்கும்.
(ஜெயந்த் ஸின்ஹா இந்திய மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர், மற்றும் ஹஸாரிபாக், ஜார்கண்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர். இவை அவருடைய தனிப்பட்ட கருத்துக்கள்)
மேலே உள்ள கருத்துக்கள் அனைத்தும் எழுதியவரின்(ர்களின்) சொந்த கருத்துக்கள் ஆகும். இவை, நரேந்த்ர மோடி இணைய தளம் மற்றும் நரேந்திர மோடி ஆப் அவசியம் இக்கருத்துக்களை ஆதரிப்பதாகாது.