இந்தியாவின் உழைக்கும் ஆண்கள் மற்றும் பெண்களின் சாதனைகளை குறிக்கும் விதமாக, இன்று உழைப்பாளர் தினத்தில் அவற்றை அலசுவோம். 25 வருடங்களாக தாராளமயமாக்கல் பொருளாதாரத்தில் போதுமான வளர்ச்சியை கண்டும், நம் இந்தியாவின் உழைக்கும் வர்க்கத்தில் 83% ஒழுங்குமுறைப்படுத்தப்படாத பிரிவில் உள்ளது.

சிக்கலான, வளைந்து கொடுக்காத நீண்ட கால உழைப்பாளர் சட்ட திட்டங்கல் பிரச்னையை மேலும் கடினமாக்குகிறது. இதனுடன், சுலபமாக கிடைக்கும் மானிய கடன் வசதி, இந்திய பொருளாதாரத்தின் பல பிரிவுகளில், உறுபத்தி பொருளாதாரத்தை, உழைப்பாளர்-முனைப்பிலிருந்து, மூலதன-முனைப்புக்கு கூடுதலாக நகர்த்தியது.

தானியங்கி தொழில் நுட்பம் (robotics), இயந்திரங்கள் மூலம் கற்றல் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்றவற்றில் ஏற்படும் முன்னேற்றம், ஒரு புதிய தானியங்கி யுகத்தை உருவாக்கி, அது தற்போதைய உழைப்பாளர்/பணியாளர் சந்தை, வேலைவாய்ப்பு தொடர்பான கருத்தியலில், வேறு உலக நாடுகளை போல் ஒரு சவாலை தோற்றுவிக்கும்.    

அதிக வளர்ச்சி இருந்த கடந்த பத்து ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட பெரும்பான்மையான வேலைவாய்ப்புகள், ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட துறைகளில் கூட, ஒழுங்குமுறை சாராத தனிமுறையானது (informal). இது இந்திய பொருளாதார வளர்ச்சியின் நன்மையை ஒரு சிலர் மட்டுமே அனுபவிக்க கூடியதாக இருந்தது என்பதை காட்டுகிறது. மறுபுறம், மக்கள் தொகையில், பணி செய்யும் வறுமையானவராக, தாழ்ந்த நிலையில் இருப்போர் அதிகரித்து கொண்டே இருக்கிறார்கள்.

நம்பத்தகுந்த இந்தியாவின் ஒழுங்குமுறைப்படுத்தப்படாத பணியாளர் சந்தை அளவு மதிப்பீடு தரவுகள், தேசிய மாதிரி சர்வே-ல் இருந்து பெறப்பட்டவை. ஒட்டுமொத்த பொருளாதாரத்தில், ஒழுங்குமுறைப்படுத்தப்படாத பணியாளர் சந்தை அளவு குறிப்பிடத்தக்க அளவு அதிகமாக, தலையானதாக இருந்ததால், வேலைவாய்ப்பு இயல்பு கூறுகளில், கடந்த சில வருடங்களில் சிறு மாற்றங்களே ஏற்பட்டுள்ளதை, தரவுகள் சுட்டி காட்டுகின்றன. 2004-05-ல், ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தப்படாத பிரிவின் சேர்மம் 13:87 ஆக இருந்தது. இது 2011-12-ல், 17:83 ஆக மாறியது.

இருப்பினும், ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட வேலைவாய்ப்பு வளர்ச்சி, அதிகளவு ஒழுங்குமுறை சாராத தனிமுறைத்தன்மையாக (informal) இருந்தது. அதனால், இந்திய பொருளாதாரத்தில் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட பிரிவிலும் கூட, ஒழுங்குமுறை தன்மையுடன் பணியில் சேர்க்கப்படுவது குறிப்பிடத்தக்க அளவு குறைந்து, ஒழுங்குமுறை சாராத தனிமுறையானது காலப்போக்கில் அதிகரித்தது. ஒழுங்குமுறைப்படுத்தப்படாத துறையில், எதிர்ப்பார்த்தப்படியே, அதிகரித்த பெரும்பான்மையான வேலைவாய்ப்புகள் ஒழுங்குமுறை சாராத தனிமுறையான இயல்புடனே இருந்தது.

நாம் இன்னும் ஆழ்ந்து ஆய்வு செய்வோமானால், நம் வளர்ச்சி பாதையில் பிரச்னைக்குறிய சில உண்மைகளை நாம் கண்டறிகிறோம். மொத்த வேலைவாய்ப்பில் விவசாயத்தின் பங்கு சுமார் 60 சதவீதத்திலிருந்து, 50 சதவீதத்துக்கும் குறைவாக விழுந்தது, உற்பத்தி துறையின் பங்கு பெரிய அளவு பாதிக்கப்படாமல் சுமார் 12 சதவீதமாக இருந்தது, உறுபத்தி அல்லாத துறையின் (கட்டுமான) பங்கு ஏறத்தாழ 6-லிருந்து 12 சதவீதமாக இரண்டு மடங்காக உயர்ந்தது, சேவை பிரிவின் பங்கு 23-லிருந்து 27 சதவீதமாக உயர்ந்தது. விவசாயம் அல்லாத துறையில், ஒழுங்குமுறை சாராத தனிமுறையான வேலைவாய்ப்பு 27 சதவீதமாக உயர்ந்தது.

அதிக வளர்ச்சி இருந்த கடந்த பத்து ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட பெரும்பான்மையான வேலைவாய்ப்புகள், ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட துறைகளில் கூட, ஒழுங்குமுறை சாராத தனிமுறையானது (informal). இது இந்திய பொருளாதார வளர்ச்சியின் நன்மையை ஒரு சிலர் மட்டுமே அனுபவிக்க கூடியதாக இருந்தது. மறுபுறம், மக்கள் தொகையில், பணி செய்யும் வறுமையானவராக, தாழ்ந்த நிலையில் இருப்போர் அதிகரித்து கொண்டே இருக்கிறார்கள்.  

கூலித்தொகையையும், சம்பளத்தையும் பணமாக கொடுப்பதற்கு பதிலாக, முறையான வழியில், அதாவது வங்கி கணக்குகள், மின்னணு மற்றும் மொபைல் பேமண்டுகள் வாயிலாக செலுத்துவது, ஒழுங்குமுறையான வேலைவாய்ப்பு கலாச்சாரத்தை உருவாக்கும்

உறுதியான உண்மையாக, இந்தியாவின் தொழிலாளர்/பணியாளர் சட்டங்கள் அடிப்படையில், பணி செய்பவர்களின் நன்மைகளை மட்டும் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டவை. பொருளாதாரத்தில் ஒட்டுமொத்த வளர்ச்சி இருந்தாலும், இந்த சட்டங்களே இந்தியாவின் குறைவான வேலைவாய்ப்புக்கும், ஒழுங்குமுறை சாராத தனிமுறையான பணியமர்த்தலுக்கும் காரணமாக உள்ளன என்பது கடந்த பல வருடங்களின் அனுபவம் மூலமாக தெரிகிறது. தொழில்முனைவை ஊக்குவிக்கவும், வேலைவாய்ப்பு உருவாக்கத்தை உந்தவும், இந்த சட்டங்கள் மாற்றப்பட வேண்டும். சட்டங்களில் சீர்திருத்தம் செய்யாமல் இருப்பது, பொதுவாக, பலவித பணியாளர்/தொழிலாளர் சட்டங்களுக்கு வழிவகுத்து, பணியாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதை தடுக்கிறது.

இருப்பினும், கடந்த பல வருடங்களாக, மத்திய அரசும், சில மாநிலங்களும் (ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத், மற்றும் ஆந்திர பிரதேசம்) முனைப்புடன் செயல்பட்டு, பணியாளர் விதி/வழிமுறைகளின் கடுமையை குறைத்து, இணக்கம் மற்றும் நடைமுறை தேவைகளை எளிமையாக்கி உள்ளன.

இது தொடர்பான அனுபவ சான்று ஒரு அடிப்படை புதிருக்கு நம்மை அழைத்து செல்கிறது: அதிக பணியாளர் சீர்திருத்த குறியீட்டை அடைந்த இந்திய மாநிலங்களில் கூட, உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் பெரும்பாலும் ஒழுங்குமுறை சாராத தனிமுறையானதாக (informal) இருந்தது. இதில் அறிந்து கொள்ள வேண்டிய பாடம், பணியாளர் சீர்திருத்தம் அவசியமான ஒன்று, ஆனால் போதுமானது அன்று. இந்திய பணியாளர்/தொழிலாளர் சந்தைகளில், ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட பொறுப்புத்தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மை கலாச்சாரம் மேம்பட துணைப்புரிய கூடிய, பரந்த சூழலை உருவாக்க தீவிரமான முயற்சிகள் தேவை.

பொருளாதாரத்தின் பல்வேறு பிரிவில், மத்திய அரசின் பெரியளவிலான மின்னணு மயமாக்கல் முனைப்பு, ஒழுங்குமுறையாக்கலின் இந்த முயற்சிக்கு துணை புரியும். அதிக வளர்ச்சி இருந்தாலும், பல துறைகள் பணியாளர்களை ஒழுங்குமுறை சாராத தனிமுறையானதாக பணிக்கு அமர்த்தின. ஏனெனில், இது அவர்களுடைய ஒட்டுமொத்த உற்பத்தி செலவினங்களை குறைத்தன.  

கூலித்தொகையையும், சம்பளத்தையும் பணமாக கொடுப்பதற்கு பதிலாக, முறையான வழியில், அதாவது வங்கி கணக்குகள், மின்னணு மற்றும் மொபைல் பேமண்டுகள் வாயிலாக செலுத்துவது, ஒழுங்குமுறையான வேலைவாய்ப்பு கலாச்சாரத்தை உருவாக்கும். ஆனால் இந்த செய்முறை நிறுவனங்களுக்கு அதிக செலவினங்களை ஏற்படுத்தும். ஆனால், இந்தியாவின் அலங்கோலமான பணியாளர்/தொழிலாளர் சந்தைகளில் இதை ஒரு திருத்த நிகழ்வாக காண வேண்டும். தீவிரமான-பணியாளர்கள்  சந்தை கொண்ட நம் பொருளாதாரத்தில் குறைந்தபட்ச ஊதியத்தொகை சட்டத்தை அமல்படுத்திய (கிட்டத்தட்ட) NREGS போன்றே இதை பார்க்க வேண்டும். NREGS உண்டாவதற்கு முன்பே, நீண்ட காலமாக இந்தியாவில் குறைந்தபட்ச ஊதிய சட்டங்கள் இருந்தன. அவை அமுலாக்கப்படாததால் நடைமுறையில் இல்லை.

அரசாங்கத்தின் மின்னணு மையமாக்கல் முயற்சிகள், நாட்டின் பணிக்கமர்த்துவோரை, பணியாளர் ஒப்பந்தங்களை மறுபரீசிலனை செய்ய வற்புறுத்துகிறது. 

நாடு முழுவதும், முதன்முதலாக கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம் அமல்படுத்தப்பட்ட போது, இதன் விளைவாக கிராமப்புற கூலித்தொகை குறிப்பிடத்தக்க அளவு உயர்ந்தது. இந்த உயர்வுக்கு ஆதரவாக போதுமான, திடமான அனுபவரீதியான சான்றுகள் பொருளாதார புள்ளி விவரங்களில் உள்ளன. NREGS நல்ல முறையில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆந்திர பிரதேசம் போன்ற மாநிலங்களில், கூலித்தொகை அதிகரித்து இருந்ததை நாங்கள் கண்டோம். கிராமப்புற தொழிலாளியை பணிக்கு அமர்த்திய அனைவரும், இப்போது NREGS பணி இடங்களில் தரப்படும் கூலிக்கு இணையாக/போட்டியாக அல்லது அதே தொகையை தர வேண்டும்.

தனியார் பணியாளர் சந்தை ஆழ்ந்த பாதிப்புக்குள்ளானது, இதன் பொருள், கிராமப்புறங்களில் உள்ள சிறு, குறு மட்டும் நடுத்தர தொழில்களின் உற்பத்தி செலவினங்கள், அவைகள் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தியிருந்தால், அதிகரித்தன. தொழிலாளர்கள்-மிகுந்த பொருளாதாரத்தில், குறைந்த பட்ச ஊதியத்தை அமல்படுத்தும், மக்கள் நலன் அரசுக்கும், வேலை வாய்ப்பு அளித்து மில்லியன் கணக்கான இந்தியர்களுக்கு அதிக வருவாய் அளிக்கும், வேகமாக வளரும் தனியார் துறைக்கும், இடையே ஒரு சமநிலை மல்யுத்தமாக இருந்தது.

அடிப்படையான பணியாளர்/தொழிலாளர் சீர்திருத்தங்கள் மற்றும் அதிகளவு மின்னணு மயம் ஆக்கப்படும் ஊதியம்/கூலித்தொகை, மற்றும் ஒப்பந்தங்கள், இந்தியாவின் தொழிலாளர்/பணியாளர் சந்தையை அதிக திறனுள்ளதாக ஆக்கும் அதே நேரத்தில், தானியங்கி தொழில்நுட்பங்களின் நீண்ட கால தாக்கங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அரசாங்கத்தின் மின்னணு மையமாக்கல் முயற்சிகள், நாட்டின் பணிக்கமர்த்துவோரை, பணியாளர் ஒப்பந்தங்களை மறுபரீசிலனை செய்ய தூண்டுகிறது. வங்கிகள், நேஷனல் பேமண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா போன்ற கட்டணம் செலுத்தும் வசதி அமைப்புகள், போன்ற முறைப்படுத்தப்பட்ட நிதி அமைப்புகள், மற்றும் தனியார் நிறுவனங்கள், போன்ற அனைத்து தரப்பிலிருந்தும், செய்முறையை எளிதாக்கவும், புதிய கட்டண முறைகளை மேற்கொள்வதை ஊக்குவிக்கவும், ஒரே நேரத்தில் உந்துதல் முனைப்பு இருக்க வேண்டும். ஒவ்வொரு நிறுவனமும், ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட சூழல், கலாச்சாரத்துக்கு மாறுவதில் ஏற்படும் குறுகிய கால செலவினங்கள் எவை என்பதை தங்கள் உள்கட்டமைப்புக்களை அலசி ஆராய்ந்து கண்டறிய வேண்டும். ஆனால், வணிகத்தில் நீண்ட காலத்துக்கு வெற்றியுடன் இயங்க, செயல் மற்றும் இயக்க ஆற்றலை எட்ட ஒவ்வொரு நிறுவனமும் கடுமையாக முயற்சிக்கும்.

அடிப்படையான பணியாளர்/தொழிலாளர் சீர்திருத்தங்கள் மற்றும் அதிகளவு மின்னணு மயம் ஆக்கப்படும் ஊதியம்/கூலித்தொகை, மற்றும் ஒப்பந்தங்கள், இந்தியாவின் தொழிலாளர்/பணியாளர் சந்தையை அதிக திறனுள்ளதாக ஆக்கும் அதே நேரத்தில், தானியங்கி தொழில்நுட்பங்களின் நீண்ட கால தாக்கங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும். பணிகளை தானியங்கி இயல்பாக மாற்றுதல், உற்பத்தி திறன் வளர்ச்சி மூலம் இந்திய பொருளாதாரத்துக்கு உதவலாம். ஆனால், நாம் முதலீடுகளை ஊக்குவித்து, புதுமை படைப்புகளை ஆதரிக்கும் கொள்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.

தனியார் நிறுவனங்களுக்கு, தானியங்கிமயம் அளிக்கும் நன்மைகள் கண்கூடாக தெரிகின்றன. ஆனால், தொழிலாளர்-பணியாளர் சந்தை அழுத்தங்கள் கொள்கை வடிவமைப்பவர்களுக்கு பல சவால்களை தோற்றுவிக்கும். புதிய வேலைவாய்ப்பு சந்தை சூழலை எதிர்நோக்கி இருக்கும்,  இந்திய பணியாளர்கள்/உழைப்பாளர்களுக்கு உதவி புரியும் வகையில் நாம் புதுமையான கொள்கைகளை வடிவமைத்து நடைமுறைப்படுத்த வேண்டும் இது நம் கல்வி, பயிற்சி முறை கொள்கைகள் மற்றும் புதுமையான வருமான வழிவகைகள் மற்றும் பாதுகாப்பு வளையங்கள் போன்றவற்றை வேறு கோணத்தில் அணுகுவதை உள்ளடக்கியதாக இருக்கலாம்.


முனைவர். ஷாமிகா ரவி, ப்ரூகிங்ஸ் இந்தியா மற்றும் ப்ரூகிங்ஸ் இன்ஸ்டிடுயூஷன் வாஷிங்கடன், டிஸி-ல், கவர்னன்ஸ் ஸ்டடிஸ் ப்ரோக்ராமின் முதுநிலை ஆய்வாளர் 

மேலே உள்ள கருத்துக்கள் அனைத்தும் எழுதியவரின்(ர்களின்) சொந்த கருத்துக்கள் ஆகும். நரேந்த்ர மோடி இணைய தளம் மற்றும் நரேந்திர மோடி ஆப் அவசியம் இக்கருத்துக்களை ஆதரிப்பதாகாது.