தேர்வு குறித்த விவாத நிகழ்ச்சியில் உரையாடிய பிரதமர் மோடி, சந்திரயான் தரையிறங்கியது, வாழ்க்கையில் தோல்விகளை எவ்வாறு சமாளிப்பது என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் என்று கூறினார். “சந்திரயான் தரையிறங்கிய போது, இஸ்ரோவுக்குச் சென்றதையும், அங்கு கடுமையாக உழைக்கும் விஞ்ஞானிகளுடன் நேரம் செலவிட்டதையும் என்னால் மறக்கவே முடியாது,” என்றார்.
இஸ்ரோ விஞ்ஞானிகளின் முயற்சிகளை நினைவுகூர்ந்த பிரதமர் மோடி, “சந்திரயான் திட்டமிட்டபடி தரையிறங்காத நிலையில், நமது விஞ்ஞானிகளின் முகங்களில் ஏற்பட்ட ஏமாற்ற உணர்வை என்னால் காணமுடிந்தது. ஒரு தற்காலிக பின்னடைவு, வெற்றி காத்திருக்கவில்லை எனப் பொருள்படாது. மேலும் சிறந்தது இனிமேல் தான் நடக்க வேண்டும் என்பதை அது குறிக்கிறது”, என்று கூறினார்.