பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று (2018, மே 28) நெதர்லாந்து அரசி மேன்மை தங்கிய மாக்சிமாவைச் சந்தித்தார்.
நெதர்லாந்து அரசி மாக்சிமா ஐ.நா. மன்ற தலைமைச் செயலாளரின் நிதி மேம்பாட்டுத் துறையின் சிறப்பு வழக்குரைஞர் என்ற முறையில் இந்தியாவுக்கு வந்துள்ளார்.
இந்திய அரசின் இந்த முன்முயற்சிகள் மூலம் எட்டப்பட்ட முன்னேற்றங்களை நெதர்லாந்து அரசி பாராட்டினார். இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்படும் மக்கள் நிதித் திட்டம் (Jan Dhan Yojana) பிரதம மந்திரி ஜீவன் ஜோதி காப்பீட்டுத் திட்டம் (Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana), யோஜனா, பிரதம மந்திரி பாதுகாப்பு காப்பீட்டுத் திட்டம் (Pradhan Mantri Suraksha Bima Yojana), அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) உள்ளிட்ட நிதிசார் திட்டங்களை மேம்படுத்த இந்திய அரசு கடந்த சில ஆண்டுகளாக மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்து பிரதமர் திரு. மோடியும் அரசி மாக்சிமாவும் குறித்து விவாதித்தனர்.
உலகளாவிய மேம்பாட்டுக்கான நிதி உள்ளிட்டவை குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர். இதில் இந்திய தொழில்நுட்பம் (ITEC) மற்றும் பொருளாதார ஒத்துழைப்புத் திட்டத்திலும் வெளிநாடுகளில் திட்ட மேம்பாடுகளுக்காக அந்தந்த அரசுகளின் தேவைகளுக்கும் முன்னுரிமைகளுக்கும் ஏற்ப கடனுதவி அளிப்பதிலும் இந்தியா மேற்கொள்ளும் முயற்சிகளை அரசி பாராட்டினார்.
Queen Máxima of the Netherlands met PM @narendramodi. pic.twitter.com/kpPZdwMTBh
— PMO India (@PMOIndia) May 28, 2018