கர்நாடக மாநிலம் பெலகாவி-ல் ரூ.2,700 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டி முடிவுற்ற திட்டப் பணிகளை நாட்டிற்கு அர்ப்பணித்தார். பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் 13-வது தவணைத் தொகையாக ரூ.16,000 கோடியை அவர் விடுவித்தார். மறுசீரமைக்கப்பட்ட பெலாகாவி-ன் ரயில் நிலையக் கட்டிடத்தை நாட்டிற்கு அர்ப்பணித்தார். நீர்வள இயக்கத்தின் கீழ் 6 பல்வேறு கிராமத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், பெலாகாவி-ன் மக்களின் ஈடு இணையற்ற அன்பு, ஆசீர்வாதங்கள் போன்றவை மக்கள் நலப்பணிகளை செய்வதற்கு அரசுக்கு உத்வேகம் அளிப்பதாகவும் இது வலிமையான ஆதாரம் என்றும் தெரிவித்தார். பெலாகாவிற்கு வருவது என்பது புனித யாத்திரைக்கு குறைந்தது அல்ல, காலனியாதிக்கத்திற்கு எதிராக குரல் கொடுத்த சித்தூரின் ராணி செல்லம்மா, புரட்சியாளர் க்ரந்திவீர் சங்கொலி ராயண்ணா ஆகியோரின் மண் இது என்பதை சுட்டிக் காட்டினார்.
போராட்டத்திற்கு இன்றளவும் பெயர் போன பெலகாவி இந்தியாவை எப்போதும் நினைவு கூரும் வகையில், பெலகாவின் பங்களிப்பு இருக்கும் என பிரதமர் எடுத்துரைத்தார்.
கர்நாடகாவின் ஸ்டார்ட்-அப் கலாச்சாரம் குறித்து குறிப்பிட்ட பிரதமர், பெலகாவி 100 ஆண்டுகளுக்கு முன்பே ஸ்டார்ட்-அப் தாயகமாக திகழ்ந்தது என்றும் கூறினார். பாபுராவ் புசல்கர் ஏற்படுத்திய தொழிற்சாலை பல்வேறு தொழில்களுக்கு அடிப்படையாக இருந்தது என்றும் தெரிவித்தார். பெலகாவியின் இந்த பங்களிப்பை மேலும் வலுப்படுத்த இரட்டை இயந்திர அரசு விரும்புவதாகவும் பிரதமர் கூறினார்.
இன்று அடிக்கல் நாட்டப்பட்டு தொடங்கப்பட்ட திட்டங்கள் மூலம் பெலகாவிக்கு புதிய சக்தியையும், வளர்ச்சியையும் ஏற்படுத்தும் என்று பிரதமர் தெரிவித்தார். போக்குவரத்து மற்றும் தண்ணீர் வசதிகளுக்காக நூற்றுக்கணக்கான கோடிகள் மதிப்பிலான திட்டங்கள் இப்பிராந்தியத்தில் அமைவதற்காக மக்களுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். பெலகாவி மூலம் பிரதமர் கிசான் திட்டத்திலிருந்து சிறப்பு நிதியை நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளும் பெற்றுள்ளதாக கூறினார். ஒரு பொத்தானை அழுத்தியதன் மூலம் ரூ.16,000 கோடி நாட்டின் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகப் பரிமாற்றம் செய்யப்பட்டதாக தெரிவித்தார். இடைத்தரகர்கள் இன்றி பெருமளவிலானத் தொகை பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், இது உலகில் உள்ள மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளதாகவும் கூறினார். காங்கிரஸ் ஆட்சிக் குறித்து ஒப்பிட்டு பேசிய அவர், ஒரு ரூபாய் பரிமாற்றம் செய்த போது, 15 பைசா மட்டுமே ஏழை மக்களை சென்றடைந்ததாக தெரிவித்தார்.
உண்மையான எண்ணங்களுடன் உழைக்கும் போது, ஆத்மார்த்தமான வளர்ச்சி ஏற்படும் என்றும் அதன் அடிப்படையில் இரட்டை இயந்திர அரசு கர்நாடக மாநிலம் மற்றும் நாட்டு மக்களின் வளர்ச்சிக்காக அனைவருடனும் இணைந்து உண்மையாக உழைத்து வருகிறது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் கர்நாடக முதலமைச்சர் திரு பசவராஜ் பொம்மை, மத்திய வேளாண் துறையமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு பிரலாத் ஜோஷி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
Belagavi is the land of several greats who inspire us even today. pic.twitter.com/oaGDJr4xxg
— PMO India (@PMOIndia) February 27, 2023
Another instalment of PM-KISAN has been transferred today. The amount has been directly transferred to the bank accounts of the beneficiaries. pic.twitter.com/huKCgw9BLh
— PMO India (@PMOIndia) February 27, 2023
Our government is giving priority to the deprived. pic.twitter.com/UeA4cFQydJ
— PMO India (@PMOIndia) February 27, 2023
हमारा मोटा अनाज हर मौसम, हर परिस्थिति को झेलने में सक्षम है और ये अधिक पोषक भी होता है।
— PMO India (@PMOIndia) February 27, 2023
इसलिए इस वर्ष के बजट में हमने मोटे अनाज को श्री-अन्न के रूप में नई पहचान दी है। pic.twitter.com/C8divhO6wr