ஐஐடி ரூர்க்கி ஏற்பாடு செய்த முதலாவது ஜெய் கிருஷ்ணா நினைவு சொற்பொழிவில் பிரதமரின் முதன்மை செயலாளர் திரு பி கே மிஷ்ரா உரையாற்றினார். கொவிட்-19 மற்றும் எதிர்காலத்தில் இந்தியாவில் பேரிடர் ஆபத்து மேலாண்மை குறித்து இந்த சொற்பொழிவு கவனம் செலுத்தியது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமரின் முதன்மை செயலாளர், பேரிடர் ஆபத்து மேலாண்மைக்கான முக்கியத்துவம் அதிகரித்து வருவதாகக் கூறினார். இதற்கான முக்கியத்துவம் அதிகரித்து பல்வேறு கூறுகள் இதில் கலந்துள்ளதால், குறுகிய மற்றும் குறிப்பிட்ட ஒரு பகுதியாக நீண்டகாலத்துக்கு இது இருக்காது என்றும், அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள நிலைமைகளை கையாளுவதற்கான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து திரு மிஷ்ரா வலியுறுத்தினார். நமக்கு கொவிட்-19 பாடம் ஒன்றை கற்றுக் கொடுத்திருப்பதாகவும், இதன் மூலம் எதிர்காலத்தை நாடு சிறப்பாக திட்டமிடலாம் என்றும் அவர் கூறினார்.