ரஷ்யக் கூட்டமைப்பின் அதிபர் விளாடிமிர் புதினுடன், பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொலைபேசியில் பேசினார்.
உக்ரைன் நிலைமை குறித்து, குறிப்பாக இந்திய மாணவர்கள் பலர் சிக்கியிருக்கும் கார்க்கிவ் நகரின் நிலைமை குறித்து இந்தத் தலைவர்கள் ஆய்வு செய்தனர். மோதல் ஏற்பட்டுள்ள பகுதிகளிலிருந்து இந்திய தேசத்தவரை பாதுகாப்புடன் வெளியேற்றுவது குறித்தும் அவர்கள் விவாதித்தனர்.