குஜராத் மாநிலம் லோத்தலில், தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகம் அமைப்பது குறித்து, லிங்கட்இன் தளத்தில் கட்டுரை ஒன்றை பதிவிட்டுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, இந்த வளாகம் அமைப்பதால் ஏற்படக்கூடிய சாதகங்களை விவரித்துள்ளார்.
‘சுற்றுலா மீது கவனம் செலுத்துவோம்’ என்ற தலைப்பில் அவர் இந்தப் பதிவை வெளியிட்டுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
“அண்மையில், மத்திய அமைச்சரவை மிகவும் சுவாரஸ்யமான முடிவு ஒன்றை மேற்கொண்டது – லோத்தலில் தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகம் அமைப்பதென முடிவு செய்தது. இந்த எண்ணம், கலாச்சாரம் மற்றும் சுற்றுலா உலகில் புதிய வாய்ப்புகளை உருவாக்கும். கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறைகளில் மேலும் அதிக அளவில் பங்கேற்க இந்தியா அழைக்கிறது.”
Recently, the Union Cabinet took a very interesting decision - of developing a National Maritime Heritage Complex in Lothal. Such a concept will create new opportunities in the world of culture and tourism. India invites more participation in the culture and tourism sectors. Here…
— Narendra Modi (@narendramodi) October 15, 2024