பிரதமர் திரு நரேந்திர மோடி, உத்திரப்பிரதேசம் கோரக்பூரில் உள்ள சவுரி சவுராவில், இம்மாதம் 4ஆம் தேதியன்று (4.2.21), காலை 11 மணிக்கு, சவுரி சவுரா நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களைக் காணொலி வாயிலாகத் தொடங்கி வைக்கிறார். இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முக்கிய நிகழ்வான `சவுரி சவுரா’ சம்பவம் நடந்து அன்றுடன் நூறு ஆண்டுகள் ஆகின்றன.
இந்த விழாவில், சவுரி சவுரா நூற்றாண்டிற்கான சிறப்பு அஞ்சல் தலையையும் பிரதமர் வெளியிடுகிறார். உத்திரப் பிரதேச முதலமைச்சரும் விழாவில் கலந்து கொள்கிறார்.
2021 பிப்ரவரி 4ஆம் தேதி முதல் 2022 பிப்ரவரி 4 வரை, உத்திரப் பிரதேச மாநிலத்தின் அனைத்து 75 மாவட்டங்களிலும் நூற்றாண்டு விழா கொண்டாங்களையும், பல்வேறு நிகழ்ச்சிகளையும் நடத்த அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.