கொவிட் தடுப்பு மருந்து மேம்பாடு மற்றும் உற்பத்தி நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய 3 நகரங்களுக்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை செல்கிறார். அகமதாபாத்தில் உள்ள ஜைடஸ் உயிரி தொழில்நுட்ப பூங்கா, ஐதராபாத்தில் உள்ள பாரத் உயிரி தொழில்நுட்ப மையம், புனேவில் உள்ள இந்திய சீரம் மையம் ஆகியவற்றுக்கு அவர் செல்கிறார்.
கொவிட்-19-க்கு எதிரான போராட்டத்தின் இறுதி கட்டத்தில் இந்தியா நுழைந்துள்ளதால், இந்த மையங்களுக்கு பிரதமர் மேற்கொள்ளும் பயணம் மற்றும் விஞ்ஞானிகளுடன் நடத்தும் ஆலோசனை ஆகியவை மக்களுக்கு தடுப்பு மருந்து வழங்குவதற்கான தயார் நிலை, சவால்கள் மற்றும் திட்டம் குறித்த முதல்கட்ட விவரங்களை அவர் அறிய உதவும்.