நேபாள நாட்டின் பிரதமராக நியமிக்கப்பட்டதற்கும், அந்நாட்டு நாடாளுமன்றத்தின் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதற்காகவும் பிரதமர் மேதகு திரு ஷேர் பகதூர் தூபாவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தொலைப்பேசி வாயிலாக இன்று தமது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இந்தியா மற்றும் நேபாளம் இடையேயான சிறப்பு நட்புணர்வின் அடிப்படையாக உள்ள தனித்துவம் வாய்ந்த மற்றும் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த மக்கள் இடையேயான இணைப்பை நினைவுக்கூர்ந்த தலைவர்கள், அனைத்துத் துறைகளிலும் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு இணைந்து பணியாற்ற சம்மதம் தெரிவித்தனர்.
குறிப்பாக, கொவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிராக தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளில் ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவது தொடர்பாக அவர்கள் ஆலோசித்தனர்.