கங்கை புத்துயிரூட்டல் திட்டத்தின் கீழ், உத்தரகாண்டில் ஆறு மெகாத் திட்டங்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி, 2020 செப்டம்பர் 29-ஆம் தேதி காலை 11 மணிக்கு காணொளிக் காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.

68 ஒரு நாளைக்கு 26 மில்லியன் லிட்டர்கள் (MLD) கழிவுநீரை சுத்திகரிக்கும் கூடம் கட்டுவது, ஹரித்துவார் ஜெக்தீப்பூரில் உள்ள  ஒரு நாளைக்கு 27 மில்லியன் லிட்டர்கள் கழிவுநீரை சுத்திகரிக்கும் கூடத்தை மேம்படுத்துதல், சாரை என்னுமிடத்தில் 18 மில்லியன் லிட்டர்கள் கழிவுநீரை சுத்திகரிக்கும் கூடக் கட்டுமானம் உள்ளிட்டவை இத்திட்டங்களில் அடங்கும். 68 எம்எல்டி ஜெக்தீப்பூர் திட்டம், பொதுத்துறை, தனியார் கூட்டு முயற்சியில் மேற்கொள்ளப்பட்ட முதலாவது கழிவுநீர்த் திட்டத்தின் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில்  அமைந்துள்ளது.

ரிஷிகேசில், லக்காத்கட்டில் ஒரு நாளைக்கு 26 மில்லியன் லிட்டர்கள் கழிவுநீரை சுத்திகரிக்கும் கூடம் தொடங்கப்படும். 

ஹரித்வார் – ரிஷிகேஷ் மண்டலத்தில் 80 சதவீதக் கழிவு நீர் கங்கை நதியில் விடப்படுகிறது. எனவே, இந்த கழிவுநீர் சுத்திகரிப்புக் கூடங்கள் தொடங்கப்படுவது, கங்கை நதியைத் தூய்மையாக வைத்திருப்பதில் முக்கியமான பங்காற்றும்

முனி கி ரெட்டி நகர் , சந்திரகேஷ்வர் நகரில் அமையவுள்ள ஒரு நாளைக்கு 7.5 மில்லியன் லிட்டர்கள் கழிவுநீரை சுத்திகரிக்கும் கூடத்தை நாட்டின் முதலாவது நான்கு அடுக்கு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையமாகும். அங்கு நிலம் கிடைப்பதில் இருந்த தட்டுப்பாடு,  ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த கழிவுநீர் சுத்திகரிப்புக் கூடம் 900 சதுர மீட்டர் பரப்பிற்கும் குறைவான இடத்தில் கட்டப்பட்டுள்ளது. பொதுவாக இந்தத் திறன் கொண்ட ஒரு கழிவுநீரை சுத்திகரிக்கும் கூடத்தை அமைப்பதற்குத் தேவைப்படும் நிலத்தில் இது 30 சதவீதம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

சொர்பானியில் ஒரு நாளக்கு 5 மில்லியன் லிட்டர்கள் கழிவுநீரை சுத்திகரிக்கும் கூடத்தை, பத்ரிநாத்தில் 1 மில்லியன் லிட்டர்கள், 0.01 மில்லியன் லிட்டர்கள் திறன் கொண்ட கழிவுநீரை சுத்திகரிக்கும் இரு கூடங்களையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

உத்தரகாண்டில் அனைத்து 30 திட்டங்களும் (100 %) தற்போது நிறைவடைந்துள்ளன. கங்கைக்கு அருகில் உள்ள 17 நகரங்களின் மாசு கவனத்தில் கொள்ளப்பட்டிருப்பது ஒரு வரலாற்று சாதனையாகும்.  கலாச்சாரம், பல்லுயிர்ப் பெருக்கம், கங்கை நதியில் மேற்கொள்ளப்பட்ட புத்தாக்க நடவடிக்கைகள் ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் ‘கங்கை அவலோகன்’ என்னும் கங்கை குறித்த முதலாவது அருங்காட்சியகத்தையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். இந்த அருங்காட்சியகம் ஹரித்துவாரில் உள்ள காந்திகாட் என்னுமிடத்தில் அமைந்துள்ளது. 

தூய்மையான கங்கைக்கான  தேசிய இயக்கம் மற்றும் இந்திய வனவிலங்கு நிறுவனம்  இணைந்து வெளியிட்டுள்ள கங்கையில் பயணம் என்னும் நூலும் இந்த நிகழ்ச்சியில் வெளியிடப்படுகிறது. இந்த வண்ணமயமான நூல் கங்கை நதியின் பல்லுயிர்ப் பெருக்கத்தையும், கலாச்சாரத்தையும் இணைக்கும் ஒரு முயற்சியாகும். கங்கை நதியின் பிறப்பிடமான கவ்முக்கிலிருந்து, அது கடலில் கலப்பதற்கு முந்தைய இடமான கங்கா சாகர் வரை பயணப்படும் கங்கையின் கதையைக் கருத்தியலாக இது கொண்டுள்ளது.

ஜல்ஜீவன் இயக்கம் மற்றும் ‘ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் கிராமப் பஞ்சாயத்துகள் மற்றும் பானி சமிதிகளுக்கான மார்கதர்ஷிகா’ ஆகியவற்றின் முத்திரைகளும் பிரதமரால் வெளியிடப்படவுள்ளன.

https://pmevents.ncog.gov.in  இணைப்பில் சேரவும்

 

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Snacks, Laughter And More, PM Modi's Candid Moments With Indian Workers In Kuwait

Media Coverage

Snacks, Laughter And More, PM Modi's Candid Moments With Indian Workers In Kuwait
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை டிசம்பர் 22, 2024
December 22, 2024

PM Modi in Kuwait: First Indian PM to Visit in Decades

Citizens Appreciation for PM Modi’s Holistic Transformation of India