தில்லியில் 109 புதிய பயிர் ரகங்களை இன்று வெளியிட்ட பிரதமர் திரு. நரேந்திர மோடி, நாட்டின் விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்க அரசு உறுதிபூண்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். பருவநிலைக்கு உகந்த மற்றும் அதிக மகசூல் தரும் பயிர் வகைகள் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கு மாறுவது குறித்து பிரதமர் திருப்தி தெரிவித்தார். அவர்களின் அனுபவங்களைக் கேட்டறிந்த அவர், இயற்கை விவசாயத்தின் நன்மைகள் குறித்து விரிவாக விவாதித்தார்.
பிரதமர் வெளியிட்டுள்ள சமூக ஊடக எக்ஸ் பதிவு வருமாறு:
"நமது விவசாய சகோதர சகோதரிகளுக்கு அதிகாரம் அளிக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். இந்த வகையில், தில்லியில் 109 புதிய பயிர் வகைகளை வெளியிடும் வாய்ப்பை இன்று நாம் பெற்றுள்ளோம். பருவநிலைக்கு உகந்த, அதிக மகசூல் தரும் இந்த ரகங்கள் உற்பத்தியையும், விவசாயிகளின் வருமானத்தையும் அதிகரிக்கும். ”
"நமது விவசாய சகோதர சகோதரிகளும் இயற்கை விவசாயத்தை நோக்கி வேகமாக அடியெடுத்து வைக்கிறார்கள் என்பது எனக்கு திருப்தி அளிக்கிறது. இன்று அவர்களின் அனுபவங்களை நெருக்கமாக அறியும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நேரத்தில் இயற்கை விவசாயத்தின் நன்மைகள் குறித்தும் விரிவாக விவாதித்தோம். ”
हम अपने किसान भाई-बहनों को सशक्त बनाने के लिए प्रतिबद्ध हैं। इसी दिशा में आज दिल्ली में फसलों की 109 नई किस्मों को जारी करने का सुअवसर मिला। जलवायु अनुकूल और ज्यादा उपज देने वाली इन किस्मों से उत्पादन बढ़ने के साथ हमारे अन्नदाताओं की आय भी बढ़ेगी। pic.twitter.com/MqW7BP4M3a
— Narendra Modi (@narendramodi) August 11, 2024
मुझे इस बात का संतोष है कि हमारे किसान भाई-बहन प्राकृतिक खेती की ओर भी तेजी से कदम बढ़ा रहे हैं। आज उनके अनुभवों को करीब से जानने का मौका मिला। इस दौरान हमने प्राकृतिक खेती के लाभों पर भी विस्तार से चर्चा की। pic.twitter.com/1pjrr2hqzQ
— Narendra Modi (@narendramodi) August 11, 2024