முன்னாள் குடியரசுத்தலைவர் திரு. பிரணாப் முகர்ஜியின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவரை நினைவு கூர்ந்தார்.
அவரை ஒரு சிறந்த ராஜதந்திரி என்று அழைத்த திரு மோடி, ஒரு சிறந்த நிர்வாகி என்றும் அவரைப் புகழ்ந்து, நாட்டின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்களிப்புகளைப் பாராட்டினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் குறிப்பிட்டுள்ளதாவது:
"பிரணாப் முகர்ஜியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரை நினைவு கூர்கிறேன். பிரணாப் அவர்கள், ஒரு சிறந்த ராஜதந்திரி, அற்புதமான நிர்வாகி மற்றும் ஞானத்தின் களஞ்சியம். இந்தியாவின் வளர்ச்சிக்கு அவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. பல்வேறு தரப்பினரிடையே ஒருமித்த கருத்தை உருவாக்கும் தனித்துவமான திறனை அவர் பெற்றிருந்தார். நிர்வாகத்தில் அவரது பரந்த அனுபவம் மற்றும் இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் நெறிமுறைகள் குறித்த அவரது ஆழமான புரிதல் ஆகியவை இதற்குக் காரணமாகும். நம் தேசம் பற்றிய அவரது கனவை நனவாக்க நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம்.”
Remembering Shri Pranab Mukherjee on his birth anniversary. Pranab Babu was a one-of-a-kind public figure—a statesman par excellence, a wonderful administrator and a repository of wisdom. His contributions to India’s development are noteworthy. He was blessed with a unique… pic.twitter.com/qNNdUcux2t
— Narendra Modi (@narendramodi) December 11, 2024