ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக எக்ஸ் வலைதளப் பதிவில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
"சகோதர சகோதரிகளுக்கு இடையேயான எல்லையற்ற அன்பின் அடையாளமாக திகழும் ரக்ஷாபந்தன் பண்டிகையை முன்னிட்டு, நாட்டுமக்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள். இந்த புனித பண்டிகை, உங்கள் அனைவரின் உறவுகளில் புதிய இனிமையையும், வாழ்க்கையில் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தையும் கொண்டு வரட்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
समस्त देशवासियों को भाई-बहन के असीम स्नेह के प्रतीक पर्व रक्षाबंधन की ढेरों शुभकामनाएं। यह पावन पर्व आप सभी के रिश्तों में नई मिठास और जीवन में सुख, समृद्धि एवं सौभाग्य लेकर आए।
— Narendra Modi (@narendramodi) August 19, 2024