தமது நைஜீரிய பயணத்தை முன்னிட்டு இந்தி ஆர்வலர்கள் அளித்த அன்பான வரவேற்பு குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி தமது உற்சாகத்தையும், பாராட்டுகளையும் இன்று பகிர்ந்து கொண்டார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:
"நைஜீரியாவில் உள்ள இந்தி ஆர்வலர்கள் எனது வருகைக்கு உற்சாகம் காட்டிய விதம் இதயத்தைத் தொடுகிறது! இந்தப் பயணம் குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
नाइजीरिया के हिन्दी प्रेमियों ने जिस प्रकार वहां के मेरे दौरे को लेकर उत्साह दिखाया है, वो हृदय को छू गया है! अपनी इस यात्रा को लेकर बहुत उत्सुक हूं। @MEAIndia@NigeriaMFA https://t.co/KtQJYUFjty
— Narendra Modi (@narendramodi) November 14, 2024
2024 நவம்பர் 16 முதல் 17 வரை நைஜீரியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளும் பிரதமரை நைஜீரிய மக்கள் இந்தியில் வரவேற்பதைக் காட்டும் நைஜீரிய இந்திய தூதரகத்தின் அதிகாரப்பூர்வ கணக்கான @india_nigeria வெளியிட்ட பதிவுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் தமது செய்தியை வெளியிட்டுள்ளார்