இரண்டாவது கேலோ இந்தியா தேசிய குளிர்கால விளையாட்டு நிகழ்ச்சியில், பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் துவக்கவுரையாற்றினார்.
இரண்டாவது கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுக்கள் இன்று முதல் தொடங்குகிறது என்று இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் கூறினார்.
குளிர்கால விளையாட்டு போட்டியில், இந்தியா தீவிரமாக இருப்பதுடன், ஜம்மு காஷ்மீரை முக்கிய இடமாக மாற்றுவதில், இது முக்கியமான நடவடிக்கை.
ஜம்மு காஷ்மீர் விளையாட்டு வீரர்களுக்கும் மற்றும் நாடு முழுவதும் இருந்து வந்துள்ள விளையாட்டு வீரர்களுக்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார்.
குளிர்கால விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள, பல மாநிலங்களில் இருந்து வந்துள்ள விளையாட்டு வீரர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது, குளிர்கால விளையாட்டுக்கான உற்சாகம் அதிகரித்துள்ளதை இது காட்டுகிறது என அவர் குறிப்பிட்டார்.
இந்த குளிர்கால விளையாட்டில் கிடைக்கும் அனுபவம், குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள உதவும் என அவர் கூறினார். இந்நிகழ்ச்சி, ஜம்மு காஷ்மீர் சுற்றுலா துறையில் புதிய உணர்வையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தும்.
உலக நாடுகள் தங்கள் மென்மையான சக்தியை வெளிப்படுத்தும் ஒரு பகுதியாக விளையாட்டு மாறிவிட்டது என அவர் கூறினார்.
விளையாட்டுக்கு உலகளாவிய பரிமாணம் இருப்பதாகவும், இந்த தொலைநோக்கு விளையாட்டு சூழல் அமைப்பில் சமீபத்திய சீர்திருத்தங்களுக்கு வழிகாட்டுவதாகவும் பிரதமர் கூறினார்.
கேலோ இந்தியா பிரச்சாரத்திலிருந்து ஒலிம்பிக் மைதானம் வரை ஒரு முழுமையான அணுகுமுறை உள்ளது.
அடிமட்டத்தில் திறமைகளை அங்கீகரிப்பதில் இருந்து, அவர்களை மிக உயர்ந்த உலகளாவிய போட்டிக்கு கொண்டு செல்வது வரை விளையாட்டு வீரர்கள் வழிநடத்தப்படுகின்றனர்.
திறமைகளை அங்கீகரிப்பது முதல், குழுவை தேர்வு செய்வது வரை, வெளிப்படைத்தன்மைக்கு அரசு முக்கியத்துவம் அளிக்கிறது. விளையாட்டு வீரர்களின் கவுரவம் மற்றும் அவர்களின் பங்களிப்புக்கான அங்கீகாரம் உறுதி செய்யப்படுகிறது என பிரதமர் கூறினார்.
சமீபத்திய தேசிய கல்வி கொள்கையில், விளையாட்டுக்கு கவுரவம் அளிக்கப்பட்டுள்ளது என பிரதமர் கூறினார். பாடத்திட்டத்துக்கு தொடர்பில்லாமல், கூடுதல் நடவடிக்கையாக முன்பு கருதப்பட்ட விளையாட்டு, தற்போது பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது மற்றும் விளையாட்டில் பெறும் மதிப்பெண்ணும், குழந்தையின் கல்வியில் கணக்கிடப்படுகிறது.
விளையாட்டுக்காக, உயர் கல்வி நிறுவனங்களும், விளையாட்டு பல்கலைக்கழகமும் ஏற்படுத்தப்படுகின்றன என பிரதமர் கூறினார்.
விளையாட்டு அறிவியல் மற்றும் விளையாட்டு மேலாண்மை ஆகியவற்றை பள்ளிகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் எனவும், இது இளைஞர்களின் வேலை வாய்ப்புகள், விளையாட்டு பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்களிப்பு ஆகியவற்றை அதிகரிக்கும் என அவர் வலியுறுத்தினார்.
தற்சார்பு இந்தியாவின் தூதர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என இளம் விளையாட்டு வீரர்களுக்கு திரு நரேந்திர மோடி அறிவுறுத்தினார். விளையாட்டு துறையில், விளையாட்டு வீரர்களின் செயல்பாடுகளை வைத்துதான் இந்தியாவை உலகம் மதிப்பிடுகிறது என கூறி பிரதமர் தனது உரையை நிறைவு செய்தார்.
आज से खेलो इंडिया- Winter Games का दूसरा संस्करण शुरु हो रहा है।
— PMO India (@PMOIndia) February 26, 2021
ये Winter Games में भारत की प्रभावी उपस्थिति के साथ ही जम्मू कश्मीर को इसका एक बड़ा हब बनाने की तरफ बड़ा कदम है।
मैं जम्मू कश्मीर को और देशभर से आए सभी खिलाड़ियों को बहुत-बहुत शुभकामनाएं देता हूं: PM @narendramodi
नई राष्ट्रीय शिक्षा नीति है, उसमें भी स्पोर्ट्स को बहुत ज्यादा महत्व दिया गया है।
— PMO India (@PMOIndia) February 26, 2021
पहले स्पोर्ट्स को सिर्फ Extra Curricular एक्टिविटी माना जाता था, अब स्पोर्ट्स Curriculum का हिस्सा होगा।
Sports की grading भी बच्चों की शिक्षा में काउंट होगी: PM @narendramodi
युवा साथियों,
— PMO India (@PMOIndia) February 26, 2021
जब आप खेलो इंडिया- Winter Games में अपनी प्रतिभा दिखाएं, तो ये भी याद रखिएगा कि आप सिर्फ एक खेल का ही हिस्सा नहीं हैं, बल्कि आप आत्मनिर्भर भारत के ब्रांड एंबेसेडर भी हैं।
आप जो मैदान में कमाल करते हैं, उससे दुनिया भारत का मूल्यांकन करती है: PM @narendramodi