தாய்லாந்து பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திருமதி பெடோங்டர்ன் ஷினவத்ராவுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். நாகரிகம், கலாச்சாரம் மற்றும் மக்களுக்கு இடையேயான இணைப்பு என்ற வலுவான அடித்தளத்தின் மீதான, இந்தியா- தாய்லாந்து இடையேயான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த முடியும் என்று திரு மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி கூறியிருப்பதாவது:
"தாய்லாந்து பிரதமராக நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துகள் @ingshin. வெற்றிகரமான பதவிக்காலத்திற்கு வாழ்த்துகள். நாகரீகம், கலாச்சாரம் மற்றும் மக்களுக்கு இடையேயான இணைப்பு என்ற வலுவான அடித்தளத்தின் மீதான இந்தியா - தாய்லாந்து இடையேயான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த உங்களுடன் இணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்குகிறேன்."
Congratulations @ingshin on your election as the Prime Minister of Thailand. Best wishes for a very successful tenure. Look forward to working with you to further strengthen the bilateral ties between India and Thailand, that are based on the strong foundations of civilisational,…
— Narendra Modi (@narendramodi) August 18, 2024