மொரீஷியஸ் நாட்டின் ரிடூட் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் பொதுச் சேவை மற்றும் புத்தாக்க நிறுவனத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடியும், மொரீஷியஸ் பிரதமர் திரு நவீன் சந்திர ராம்கூலமும் இன்று கூட்டாகத் தொடங்கி வைத்தனர். இந்தியா-மொரீஷியஸ் மேம்பாட்டு கூட்டாண்மையின் கீழ் செயல்படுத்தப்பட்ட இந்த முக்கிய திட்டம், மொரீஷியஸில் திறன் மேம்பாட்டுக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை சுட்டிக் காட்டுகிறது.
2017-ம் ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் 4.74 மில்லியன் அமெரிக்க டாலர் மானியத்தின் மூலம் நிதியளிக்கப்பட்ட இந்த அதிநவீன நிறுவனம் அமைச்சகங்கள், பொது அலுவலகங்கள், துணை நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்களில் உள்ள மொரிஷியஸ் அரசு ஊழியர்களின் பயிற்சித் தேவைகளை பூர்த்தி செய்யும். பயிற்சிக்கும் அப்பால், இந்த நிறுவனம் பொது நிர்வாகம், ஆராய்ச்சி, நிர்வாக ஆய்வுகள் மற்றும் இந்தியாவுடன் நிறுவன இணைப்புகளை வளர்ப்பதில் சிறந்த மையமாக செயல்படும்.
இந்த நிகழ்ச்சியில் இந்திய தொழில்நுட்ப பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற்று இந்தியாவில் பயிற்சி பெற்ற மற்றும் கல்வி பயின்ற முன்னாள் மாணவர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார். இத்தகைய திறன் மேம்பாட்டு பரிமாற்றங்கள் இரு நாடுகளின் மக்களுக்கு இடையேயான உறவுகளுக்கு மேலும் வலு சேர்த்துள்ளது.
உலகளாவிய தென் பகுதி நாடுகளுக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டுடன் இணைந்த இந்த நிறுவனம், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் நம்பகமான கூட்டாளியாக இந்தியாவின் பங்கையும், விரிவான இந்தியா-மொரீஷியஸ் கூட்டாண்மையை வலுப்படுத்துவதிலும் அதன் அசைக்க முடியாத உறுதிப்பாட்டையும் பிரதிபலிக்கிறது.
PM Dr. Navinchandra Ramgoolam and I jointly inaugurated the Atal Bihari Vajpayee Institute of Public Service and Innovation. It will serve as a hub for learning, research and public service, fostering new ideas and leadership for the future. It also strengthens our shared… pic.twitter.com/hrb5p7XRkp
— Narendra Modi (@narendramodi) March 12, 2025