கயானாவின் ஜார்ஜ்டவுனில் நடைபெற்ற "தாயின் பெயரில் ஒரு மரக்கன்று" நடும் இயக்கத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடியும், கயானா அதிபர் டாக்டர் இர்பான் அலியும் பங்கேற்றனர். இது நீடித்த நிலைத்தன்மைக்கான பகிரப்பட்ட உறுதிப்பாடு என்று திரு மோடி குறிப்பிட்டார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி இது பற்றி பதிவிட்டிருப்பதாவது:
"நிலைத்தன்மைக்கான பகிரப்பட்ட அர்ப்பணிப்பு!
கயானா அதிபரும், எனது நண்பருமான டாக்டர் இர்பான் அலி அவர்கள், தனது பாட்டி மற்றும் மாமியாருடன் இணைந்து ஒரு மரத்தை நட்டு, "தாயின் பெயரில் ஒரு மரக்கன்று" நடும் இயக்கத்தில் பங்கேற்றார். @DrMohamedIrfaa1 @presidentaligy"
A shared commitment to sustainability!
— Narendra Modi (@narendramodi) November 20, 2024
In a very special gesture, the President of Guyana and my friend, Dr. Irfaan Ali, took part in the ‘Ek Ped Maa Ke Naam’ (a tree for Mother) movement by planting a tree with his grandmother and mother-in-law.@DrMohamedIrfaa1… pic.twitter.com/WxgWrTmZdt