மேதகு பெருமக்களே,
அதிபர் திரு. பைடன்,
பிரதமர் திரு. மாரிசன்
பிரதமர் திரு. சுகா,
நண்பர்களுடன் கலந்து கொள்வது மகிழ்ச்சியளிக்கிறது!
அதிபர் திரு. பைடனின் இந்த முன்முயற்சிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
பெருமக்களே,
நமது ஜனநாயக மாண்புகளாலும், இந்திய- பசிபிக் பகுதியில் தடையற்ற, திறந்தவெளி போக்குவரத்தில் நமது உறுதித்தன்மையினாலும் நாம் ஒன்றிணைந்துள்ளோம்.
தடுப்பூசிகள், பருவநிலை மாற்றம் மற்றும் வளர்ந்துவரும் தொழில்நுட்பங்கள் ஆகிய இன்றைய நமது திட்டங்கள், சர்வதேச நன்மைக்கான சக்தியாக, க்வாட் அமைப்பை மாற்றியுள்ளது.
இந்தியாவின் பாரம்பரிய தத்துவமான வசுதைவ குடும்பகம், அதாவது உலகமே ஒரு குடும்பம் என்பதின் விரிவாக்கமாக இந்த நேர்மறை தொலைநோக்குப் பார்வையை நான் கருதுகிறேன்.
பகிர்ந்து கொள்ளும் நமது மாண்புகளை மேம்படுத்தவும், பாதுகாப்பான, நிலையான மற்றும் வளமான இந்திய- பசிபிக்கை உருவாக்குவதற்கும் முன்பை விடவும் நெருக்கமாக நாம் இணைந்து பணிபுரிவோம்.
இன்றைய உச்சிமாநாட்டின் கூட்டம், க்வாட் அமைப்பு வளர்ச்சி அடைந்துள்ளதை எடுத்துக் காட்டுகிறது.
இந்த பிராந்தியத்தில் நிலையான, முக்கிய தூணாக இனி இது விளங்கும்.
நன்றி.