ஜப்பான் சென்ற பிரதமர் மோடி அங்கு ஜப்பான் பிரதமர் பூமியோ கிஷிடாவை சந்தித்துப் பேசினார். தொடர்ந்து பிரதமர் மோடிக்கு ஜப்பான் பிரதமர் கிஷிடா இரவு விருந்து வழங்கினார்.
பல்வேறு துறைகளிலும் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்திய இருவரும், உலகளாவிய பிரச்சினைகள் குறித்தும் ஆக்கப்பூர்வமான விவாதங்களை நடத்தினர்.
இந்தியா, ஜப்பான் இடையே வளர்ந்து வரும் பொருளாதார உறவுகள் குறித்து இருநாட்டு தலைவர்களும் பரஸ்பரம் பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டனர்.
அப்போது, விரைவுசக்தி திட்டம் மூலம் வெளிநாட்டினர் இந்தியாவில் எளிதாக முதலீடு செய்யும் வகையில் வணிகத் தளவாடங்களை மேம்படுத்த இந்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றி பிரதமர் மோடி எடுத்துரைத்தார். ஜப்பான் நிறுவனங்கள் அதிக அளவில் இந்தியாவில் முதலீடு செய்ய முன்வர வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தினார்.