சுல்தான்பூர் லோதியில் பீர் சாகிப் குருத்வாராவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று வழிபாடு செய்தார். மத்திய உணவு பதப்படுத்தும் தொழில்கள் துறை அமைச்சர் திருமதி ஹர்ஸிம்ரத் காவுர் பாதல், பஞ்சாப் ஆளுநர் வி.பி. சிங் பட்னோரே, பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் ஆகியோரும் உடன் சென்றிருந்தனர்.
குருத்வாரா பிரதான வளாகத்திற்குள் பிரதமர் வழிபாடு செய்தார். அவருக்கு குருமார்கள் சால்வை அளித்தனர். அதன்பிறகு குருத்வாரா வளாகத்தை அவர் சுற்றிப் பார்க்க அழைத்துச் சென்றனர். குருநானக் தேவ் 14 ஆண்டுகள் தியானம் செய்ததாகக் கருதப்படும் பீர் மரத்தை அவர் பார்த்தார்.
அதன்பிறகு தேரா பாபா நானக்கிற்கு பிரதமர் புறப்பட்டுச் சென்றார். அங்கு பயணிகள் முனைய கட்டடத்தை அவர் திறந்து வைத்து, கர்தார்பூர் யாத்ரிகர்களின் முதலாவது அணியினரின் பயணத்தை கொடி அசைத்துத் தொடங்கி வைக்கிறார்.