சர்தார் பட்டேலின் பிறந்தநாள் விழாவான இன்று குஜராத் மாநிலம் கெவாடியாவில் உள்ள உலகப் புகழ் பெற்ற ஒற்றுமைச் சிலையின் முன்பாக இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சர்தார் பட்டேலின் பிறந்தநாள் தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது.
ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற குறிக்கோளை எட்டும் விதமாக நாடு முழுவதும் ஒற்றுமைக்கான ஓட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
“சர்தார் பட்டேலின் பிறந்தநாளில் அவருக்கு புகழஞ்சலி. நாட்டுக்கு அவரது பங்களிப்பு அளப்பரியது” என்று பிரதமர் கூறினார்.
“அவர் இந்தியாவை ஒன்றுபடுத்திய வல்லவர். விவசாயிகளின் தலைவர், சிறந்த நிர்வாகி, ஏழைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதில் சமரசத்திற்கு இடம் அளிக்காதவர், சர்தார் பட்டேலின் இணையற்ற பங்களிப்பை நாடு எப்போதும் நினைவில் வைத்திருக்கும்” என்று பிரதமர் தெரிவித்தார்.
பிரதமர் கெவாடியாவில் தேசிய ஒற்றுமை தின உறுதிமொழியை செய்து வைத்தார்.