Prime Minister notes PM Netanyahu’s contribution in strengthening India-Israel ties
The two leaders reiterate their commitment to further strengthen India-Israel Strategic Partnership

பிரதமர் திரு நரேந்திர மோடி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு இஸ்ரேல் பிரதமர் மேதகு திரு பெஞ்சமின் நேதன்யாஹூ தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

இந்திய மக்கள் மீது அவர் காட்டும் ஆழ்ந்த அன்பு மற்றும் வாழ்த்துகளுக்கு நன்றி தெரிவித்த திரு மோடி, கடந்த பல ஆண்டுகளாக இந்தியா-இஸ்ரேல் உறவுகளை வலுப்படுத்துவதில் அவரது பங்களிப்பையும் குறிப்பிட்டார்.

அனைத்துத் துறைகளிலும் இந்தியா-இஸ்ரேல் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்த இரு தலைவர்களும் உறுதிபூண்டனர்.

அவர்கள் தொடர்ந்து தொடர்பில் இருக்க ஒப்புக்கொண்டனர்.