பிரதமர் திரு நரேந்திர மோடி, கார்கில் போரில் உயிர்நீத்த தியாகிகளுக்கு கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு அஞ்சலி செலுத்தியுள்ளார். கார்கில் வெற்றி தினம், இந்தியாவின் போற்றத்தக்க துணிச்சல்மிக்கவர்களின் வீர சரித்திரத்தை முன்னிறுத்துகிறது, அவர்கள் எப்போதும் நாட்டு மக்களுக்கு உத்வேகம் அளிப்பார்கள் என்று திரு மோடி கூறினார்.
இது தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
“கார்கில் வெற்றி தினம், இந்தியாவின் போற்றத்தக்க துணிச்சல்மிக்கவர்களின் வீர சரித்திரத்தை முன்னிறுத்துகிறது, அவர்கள் எப்போதும் நாட்டு மக்களுக்கு உத்வேகம் அளிப்பார்கள். இந்த சிறப்பு நாளில், எனது இதயத்தின் ஆழத்திலிருந்து அவர்களுக்கு வணக்கம் செலுத்துகிறேன். ஜெய் ஹிந்த்!”
कारगिल विजय दिवस भारत के उन अद्भुत पराक्रमियों की शौर्यगाथा को सामने लाता है, जो देशवासियों के लिए सदैव प्रेरणाशक्ति बने रहेंगे। इस विशेष दिवस पर मैं उनका हृदय से नमन और वंदन करता हूं। जय हिंद!
— Narendra Modi (@narendramodi) July 26, 2023