பகவான் பிர்சா முண்டா மற்றும் கோடிக்கணக்கான பழங்குடியின வீரர்களின் கனவுகளை நனவாக்க ‘ஐந்து உறுதிப்பாடுகளின்’ சக்தியுடன் நாடு முன்னேறி வருவதாக பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். பழங்குடியினர் கௌரவ தினத்தையொட்டி பிரதமர் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து காணொலி செய்தியை இன்று வெளியிட்டுள்ளார். நாட்டின் பழங்குடியின பாரம்பரியத்தின் பெருமையை பழங்குடியினர் கௌரவ தினம் மூலம் வெளிப்படுத்துவதும், பழங்குடியின சமுதாயத்தின் மேம்பாட்டுக்கு உறுதி பூண்டுவதும் அந்த ஆற்றலின் ஒரு பகுதியாகும் என்று பிரதமர் கூறியுள்ளார்.
பகவான் பிர்சா முண்டாவுக்குப் மரியாதை செலுத்திய பிரதமர், நவம்பர் 15-ஆம் தேதி பழங்குடியினரின் பாரம்பரியத்தைக் கொண்டாடும் நாளாகும் என்று கூறியுள்ளார். பகவான் பிர்சா முண்டா நமது விடுதலைப் போராட்ட வீரர் மட்டுமல்லாமல், நமது ஆன்மிகம் மற்றும் கலாச்சார மாண்பை கட்டிக்காத்தவராகவும் இருந்தார் என அவர் தெரிவித்துள்ளார்.
விடுதலைப்போராட்டத்தில் பழங்குடியின சமூகத்தின் பங்களிப்பை நினைவுகூர்ந்த பிரதமர், விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற முக்கிய பழங்குடியின இயக்கங்கள் மற்றும் போராட்டங்களையும் நினைவு கூர்ந்தார். திலக் மாஞ்சி தலைமையிலான டாமின் சங்க்ராம், புத்து பகத்தின் தலைமையிலான லர்கா இயக்கம், சித்து-கன்ஹு கிராந்தி, தானா பகத் இயக்கம், வேக்தா பில் இயக்கம், நாய்க்டா இயக்கம், சந்த் ஜோரியா பரமேஷ்வர் மற்றும் ரூப் சிங் நாயக், லிம்டி தாஹோத் போர், மன்கரின் கோவிந்த் குருஜி, அல்லூரி சீதாராம ராஜு தலைமையிலான ராம்பா இயக்கம் ஆகியவற்றை அவர் நினைவுகூர்ந்துள்ளார்.
பழங்குடியினரின் பங்களிப்பை அங்கீகரித்து கொண்டாடுவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை பிரதமர் பட்டியலிட்டார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பழங்குடியினர் அருங்காட்சியகங்கள் மற்றும் ஜன்தன், கோபர்தன், வன்தன், சுயஉதவி குழுக்கள், தூய்மை இந்தியா, பிரதமரின் வீட்டுவசதி திட்டம், தாய்மார்களுக்கான பிரசவ உதவித்தொகை, கிராம சாலைகள் திட்டம், மொபைல் இணைப்பு, ஏக்லவ்யா பள்ளிகள், 90 சதவீத வன உற்பத்தி பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, ரத்த சோகைக்கான தடுப்பூசிகள் பழங்குடியின ஆராய்ச்சி நிறுவனங்கள், இலவச கொரோனா தடுப்பூசிகள், இந்திர தனுசு இயக்கம் ஆகிய பல்வேறு திட்டங்கள் மற்றும் இயக்கங்கள் பழங்குடியினர் சமுதாயத்தினருக்கு பெருமளவில் உதவியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
பழங்குடியின சமுதாயத்தின் வாழ்க்கை, வீரம் ஆகியவற்றை விளக்கிய பிரதமர்,“இந்த பெரும் பாரம்பரியத்திலிருந்து இந்தியா தனது எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். பழங்குடியின கௌரவ தினம் இதற்கான வாய்ப்பாகவும், ஊடகமாகவும் மாறும் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன்” எனக் கூறி பிரதமர் தமது செய்தியை நிறைவு செய்துள்ளார்.
Tributes to Bhagwan Birsa Munda on his Jayanti. pic.twitter.com/8D8gqgZx6N
— PMO India (@PMOIndia) November 15, 2022
15th November is the day to remember the contributions of our tribal community. pic.twitter.com/j77LDHpWiA
— PMO India (@PMOIndia) November 15, 2022
The nation takes inspiration from Bhagwan Birsa Munda. pic.twitter.com/4baMYWMdA8
— PMO India (@PMOIndia) November 15, 2022
India is proud of the rich and diverse tribal community. pic.twitter.com/bSx6OLRQE3
— PMO India (@PMOIndia) November 15, 2022