Quoteஇரு அவைகளிலும் குடியரசுத் தலைவரின் தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய உரையானது நமது தேசத்திற்கே வழிகாட்டுகிறது
Quoteஉலகளவில் இந்தியா மீது நேர்மறை சிந்தனை மற்றும் நம்பிக்கை உள்ளது
Quoteநிர்பந்தத்தின் பேரில் அல்லாமல், உறுதிப்பாட்டின் அடிப்படையில் இன்று சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன
Quoteஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது இந்தியாவை ‘பொலிவிழந்த தசாப்தம்’ என்ற நிலையிலிருந்து, ‘இந்தியாவினுடைய தசாப்தம்’ என்று மக்கள் அழைக்கும் நிலையில் உள்ளது
Quoteஜனநாயகத்தின் தாயாக இந்தியா உள்ளது. ஆக்கப்பூர்வமான விமர்சனத்தின் மூலமே வலிமையான ஜனநாயகம் தழைத்தோங்கும். விமர்சனம் என்பது தெளிவைப் பெறுவதற்காகத்தான்
Quoteஆக்கப்பூர்வமான விமர்சனத்திற்குப் பதிலாக சிலர் நிர்பந்தத்தின் பேரில் விமர்சனம் செய்கின்றனர்
Quote140 கோடி இந்தியர்களின் ஆசிர்வாதமே எனது பாதுகாப்புக் கவசம்
Quoteநடுத்தர வர்க்கத்தினரின் நம்பிக்கையை பெறும் வகையில் நமது அரசு செயல்படுகிறது, அம்மக்களின் நேர்மைக்குத் தகுந்த மரியாதை அளிக்கப்படுகிறது
Quoteஇந்திய சமூகமானது எதிர்மறையை எதிர்கொள்ளும் ஆற்றல் கொண்டது. ஆனால் இந்த எதிர்மறையை ஒருபோதும் ஏற்றுக் கொள்வதில்

மக்களவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பதிலளித்துப் பேசினார்.

இரு அவைகளிலும் குடியரசுத் தலைவரின் தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய உரை நமது தேசத்திற்கே வழிகாட்டுகிறது. அவருடைய உரை பெண்கள் சக்திக்கு உத்வேகம் அளித்து, இந்தியாவின் பழங்குடியின சமுதாயத்திற்கு தன்னம்பிக்கையை வளர்த்து பெருமை கொள்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது.  நமது நாடு தீர்மானத்துடன் கூடிய வெற்றி பெறுவதற்கு விரிவான செயல்திட்டத்தை குடியரசுத் தலைவர் அளித்துள்ளார் என்று பிரதமர் கூறினார்.

     சவால்கள் வரலாம், ஆனால் 140 கோடி இந்தியர்களின் உறுதிப்பாட்டின் மூலம் நமது தேசம் அனைத்து தடைகளிலிருந்தும் மீண்டு வரும் என்று பிரதமர் தெரிவித்தார். 100 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படும் இயற்கை சீற்றங்களின் போது நம்நாடு அதனை எவ்விதம் எதிர்கொண்டது மற்றும் போர்க்கால சமயங்களில் ஒவ்வொரு இந்தியரும் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தனர். அதுபோன்ற கடினமான காலக்கட்டத்திலும் இந்தியா உலகளவில் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது என்றார்.

உலக அளவில் இந்தியாவின் மீது நேர்மறையான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். இந்தியாவின் சர்வதேச நிலைப்பாடு, இந்தியாவின் வளரும் திறன், இந்தியாவில் உருவாகும் புதிய வாய்ப்புகள் ஆகியவை இந்த நேர்மறையான ஸ்திரத்தன்மைமிக்க நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக பிரதமர் கூறினார். நாட்டின் நம்பிக்கை சூழல் குறித்து குறிப்பிட்ட பிரதமர், இந்தியாவில் நிலையான அரசு உள்ளதாகத் தெரிவித்தார். கட்டாயப்படுத்துதல் மூலம் சீர்திருத்தங்கள் நடைபெறவில்லை என்று கூறிய அவர்,  அவை நம்பிக்கையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாகக் குறிப்பிட்டார். இந்தியாவின் செழுமையை உலக நாடுகள் காண்பதாக அவர் தெரிவித்தார்.

கடந்த 2014-ம் ஆண்டுக்கு முன்பாக 2004-ஆம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை ஊழல்கள் நடைபெற்றதாகவும், அதே நேரத்தில் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் தீவிரவாதத் தாக்குதல் நடைபெற்றதாகவும் இந்தியப் பொருளதாரம் சரிவடைந்து இந்தியர்களின் குரல் பலவீனமாக இருந்தது என்றும் கூறினார். அக்காலகட்டம் வாய்ப்புகளில் ஏற்பட்ட துன்பம் என்ற நிலை நிலவியதாகத் தெரிவித்தார்.

நாடு தற்போது முழு தன்னம்பிக்கையுடன் இருப்பதாகவும், அதனுடைய  கனவுகளும்,  உறுதிப்பாடுகளும். நிறைவேறி வருவதாகவும், உலக நாடுகள் இந்தியாவை நம்பிக்கையுடன் உற்று நோக்கியுள்ளதாகவும், இதற்கு இந்தியாவின் ஸ்திரத்தன்மையும், சாத்தியங்களும் காரணம் என்று குறிப்பிட்டார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போது, இந்தியா 10 ஆண்டுகளில் இழந்ததாக  அவர் கூறினார். தற்போது இது இந்தியாவின் 10 ஆண்டுகாலம் என்று மக்கள் அழைப்பதாகத் தெரிவித்தார்.

ஜனநாயகத்தின் தாயாக இந்தியா விளங்குவதாகக் குறிப்பிட்ட பிரதமர், வலிமையான ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமான விமர்சனங்கள் வழிவகுக்கும் என்றும் இது தூய்மையாக்கலின் ஒரு அங்கம் என்றும் குறிப்பிட்டார். ஆனால் இப்போது ஆரோக்கியமான விமர்சனங்களுக்குப் பதிலாக சில கட்டாயப்படுத்தப்பட்ட விமர்சனங்களைத் தெரிவிப்பதாக கூறினார்.  கடந்த 9 ஆண்டுகளில், ஆரோக்கியமான குற்றச்சாட்டுக்களுக்குப் பதிலாக கட்டாயப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டை நாம் எதிர்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார். இந்தக் குற்றச்சாட்டுகள் மூலம் முதன் முறையாக அடிப்படை வசதிகளைப் பெற்றுள்ள மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது என்று கூறினார். பரம்பரை ஆட்சியின் வாரிசாக இல்லாமல் தாம் 140 கோடி இந்தியர்களின் குடும்பத்தில் ஒரு உறுப்பினராக இருக்கிறேன் என்றும் அவர் தெரிவித்தார். 140 கோடி இந்தியர்களின் ஆசீர்வாதங்களே என்னுடைய பாதுகாப்பு அரண் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

தலித்துகள், ஆதிவாசிகள், பெண்கள் மற்றும் விளிம்பு நிலை மக்களுக்கு அரசின் திட்டப்பயன்கள் சென்றடைவதை உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். இந்தியாவின் மகளிர் சக்தி குறித்து குறிப்பிட்ட பிரதமர், இந்தியாவின் மகளிர் சக்தியை வலுப்படுத்த எந்த முயற்சியும் ஈடுபடவில்லை என்றும் கூறினார். இந்தியாவின் தாய்மார்கள் வலுப்பெறும் போது மக்கள் வலுப்பெறுவதாகவும், மக்கள் வலுப்பெறும் போது, சமூகம் வலுவடைவதாகவும் இது நாட்டை வலுவடையச் செய்வதாகவும் தெரிவித்தார்.

நடுத்தர மக்களின் விருப்பங்களை அரசு நிறைவேற்றியுள்ளதாகவும், அவர்கள் கௌரவத்துடன் வாழ வழி வகுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இந்தியாவில் குடிமக்கள் முழு நேர்மறை சிந்தனையுடன் இருப்பதாகக் குறிப்பிட்ட பிரதமர், எதிர்மறை போக்கை எதிர்கொள்ளும் திறன் இந்திய சமூகத்திற்கு இருந்த போதிலும், இந்த  எதிர்மறைப் போக்கை ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை என்று கூறினார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்

  • Ankur Srivastava Nagar Mantri BJP February 17, 2023

    जय हिंद
  • ckkrishnaji February 15, 2023

    🙏
  • Kapil Parashar February 11, 2023

    https://fb.watch/iDxIcJRh0S/
  • SHRIGOPAL SHRIVASTAVA February 11, 2023

    good
  • Harjibhai gamara February 11, 2023

    Modi Ji Zinda bad
  • CHANDRA KUMAR February 11, 2023

    पुलवामा हमला हो, तो मोदी की साजिश चीनी सैनिक घुस आए, मोदी की साजिश अडानी का शेयर बढ़े, मोदी की साजिश भाई , मोदी कोई भूत है क्या, जो हर जगह दिखने लगा है, आपलोगों को। अडानी का शेयर उठेगा, अडानी का शेयर गिरेगा। यह तो स्वाभाविक सी बात है। जिसको अडानी का शेयर खरीदना है, खरीदे, बेचना है तो बेचे। अब मोदी कहां से आ गया, इन सब में। दर असल, जब से मोदीजी ने, यूरोप अमेरिका को नजर अंदाज करके , रुस से ईंधन खरीदा गया है। तभी से भारत पर आर्थिक प्रतिबंध लगाने का प्रयास हो रहा है। पहले विदेशी कंपनी, निराधार आरोप लगाकर भारतीय शेयर धारकों से अडानी के कंपनी का शेयर बिकवा दिया। फिर विदेशी बैंक ने एक साथ अपना शेयर बेचने लगा, अपना निवेश वापस लेने लगा, अपना दिया कर्ज वापस मांगने लगा। अब भारत के सबसे बड़े कंपनी ग्रुप को धराशाई करने के बाद, अब यह साजिश रचा जा रहा है, की भारत में कोई भी विदेशी निवेश नहीं करे। 1. इससे भारतीय अर्थव्यवस्था बदहाल होगा। 2. भारतीय राजनीति का आंतरिक माहौल खराब होगा। 3. भारतीय लोकतंत्र को खतरे में बताकर आंदोलन प्रारंभ किया जयेगम 4. भारतीय केंद्र सरकार को अस्थिर करके लोकसभा चुनाव 2024 में बीजेपी को हराया जायेगा। 5. गठबंधन की सरकार को सत्ता में लाकर, फिर से यूरोप अमेरिका, अपना मनमानी करेगा। इससे बचने के लिए कुछ उपाय करना चाहिए 1. मोरिसस और स्विट्जरलैंड को निवेश करने के लिए आमंत्रित किया जाए। 2. चीन को लहासा कोलकाता कॉरिडोर बनाने के बहाने, भारत में एक अरब डॉलर का निवेश करने के लिए प्रेरित किया जाए। क्योंकि अमेरिका अपना चीनी कर्ज और बॉन्ड पेपर को बेईमानी करना चाह रहा है। ऐसे में चीन को भारत के पक्ष में किया जाए और कोरोना फैलाने के आरोप से बचाने का आश्वासन दिया जाए। ध्यान रहे केवल आश्वासन ही देना है, चीन को कोई वास्तविक लाभ नहीं देना, न आर्थिक , न सामरिक, न कूटनीतिक। किसी भी प्रकार से चीन को लाभ पहुंचाने से बचा जाए। 3. छोटे छोटे देशों को पैसा देने की जगह, अब पैसा लिया जाए। तुर्की और सीरिया को निवेश करने के लिए प्रेरित किया जाए। जब छोटे छोटे देश निवेश करेंगे, तब वे छोटे छोटे देश आयात भी करेंगे। उन्हें लगेगा, भारत में हमारा ही कंपनी उत्पादन कर रहा है, इसीलिए हम भारत से ही सामान खरीदेंगे। 4. भारतीयों को अंतरराष्ट्रीय व्यापार करने का प्रशिक्षण दिया जाए। 5. अंतराष्ट्रीय कंपनी बनने में मदद किया जाए। 6. निर्यात को बढ़ाने के लिए प्रेरित किया जाए। 7. ऐसे वस्तुओं का उत्पादन किया जाए, जिसे निर्यात किया जा सके। 8. चीन और अमेरिका के व्यापार करने के तरीके को बारीकी से सीखा जाए। आखिर चीन और अमेरिका किस तरह से उत्पादन कर रहा है, किस तरह से व्यापार का प्रसार कर रहा है। यह भारतीय पेशेवर व्यापारियों छात्रों प्रोफेसरों को पढ़ने और रिसर्च करने के लिए भेजा जाए। भारतवर्ष को अस्थिर करने से बचाने के लिए, भारतीय अर्थव्यवस्था का नियंत्रण, केंद्र सरकार को अपने हाथ में रखना चाहिए।
  • gyaneshwar February 11, 2023

    shree Ganeshay namah Jai Ho congratulations BJP Government Bharat Mata ki Jai 🇮🇳🇮🇳🇮🇳🐅🌺🌹🙏🙏
  • Balaji R February 10, 2023

    I haven't seen a person as powerful a speaker as Narendra Modiji. Wonderful Sir. You have no match in this country. You talk with a sense of commitment, sincerity, a vision and farsightedness, and a determination to take this country to the next higher level. Bharat needs you forever.
  • Balaji R February 10, 2023

    Excellent, Very Spirited Speech by Our beloved Pradhan Mantri Modiji. Long Live Modiji.
  • T. Balasubramanian February 10, 2023

    Excellent reply and put forward the message to the nation
Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
How PM Modi made Buddhism an instrument of India’s foreign policy for global harmony

Media Coverage

How PM Modi made Buddhism an instrument of India’s foreign policy for global harmony
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Share your ideas and suggestions for 'Mann Ki Baat' now!
April 05, 2025

Prime Minister Narendra Modi will share 'Mann Ki Baat' on Sunday, April 27th. If you have innovative ideas and suggestions, here is an opportunity to directly share it with the PM. Some of the suggestions would be referred by the Prime Minister during his address.

Share your inputs in the comments section below.