நண்பர்களே,
இந்தியா நம்பிக்கை, ஆன்மீகம் மற்றும் பாரம்பரியங்களின் பன்முகத்தன்மை கொண்ட நாடு. உலகின் பல முக்கிய மதங்கள் இங்கு பிறந்தன, உலகின் ஒவ்வொரு மதமும் இங்கு மரியாதையைப் பெற்றுள்ளன.
'ஜனநாயகத்தின் தாய்' என்ற முறையில், உரையாடல் மற்றும் ஜனநாயகக் கொள்கைகள் மீதான நமது நம்பிக்கை காலங்காலமாக அசைக்க முடியாதது. 'உலகம் ஒரு குடும்பம்' என்று பொருள்படும் 'வசுதைவ குடும்பகம்' என்ற அடிப்படைக் கோட்பாட்டில் நமது உலகளாவிய நடத்தை வேரூன்றியுள்ளது.
உலகை ஒரே குடும்பமாகக் கருதும் இந்த எண்ணமே, ஒவ்வொரு இந்தியரையும் 'ஒரே பூமி' என்ற பொறுப்புணர்வுடன் இணைக்கிறது. 'ஒரே பூமி' என்ற உத்வேகத்துடன்தான் இந்தியா 'சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை' திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இந்தியாவின் முன்முயற்சி மற்றும் உங்கள் ஆதரவால், பருவநிலை பாதுகாப்பு கொள்கைகளுக்கு ஏற்ப, இந்த ஆண்டு முழு உலகமும் 'சர்வதேச சிறுதானிய ஆண்டை' கொண்டாடுகிறது. இந்த உத்வேகத்திற்கு ஏற்ப, இந்தியா 'பசுமை தொகுப்பு முன்முயற்சி - ஒரே சூரியன், ஒரே உலகம், ஒரே தொகுப்பு ' என்ற திட்டத்தை சிஓபி -26 இல் தொடங்கியது.
இன்று, பெரிய அளவிலான சூரியப் புரட்சி நடந்து கொண்டிருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக நிற்கிறது. லட்சக்கணக்கான இந்திய விவசாயிகள் இயற்கை விவசாயத்தை தழுவியுள்ளனர். இது மனித ஆரோக்கியத்தையும் மண் மற்றும் பூமியின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பதற்கான ஒரு பெரிய பிரச்சாரமாகும். பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியை அதிகரிக்க இந்தியாவில் 'தேசிய பசுமை ஹைட்ரஜன் மிஷன்' என்ற திட்டத்தையும் தொடங்கியுள்ளோம். இந்தியாவின் ஜி-20 மாநாட்டின் போது, உலகளாவிய ஹைட்ரஜன் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கான குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளையும் நாங்கள் எடுத்துள்ளோம்.
நண்பர்களே,
பருவநிலை மாற்றத்தின் சவாலை மனதில் கொண்டு, ஆற்றல் மாற்றம் 21 ஆம் நூற்றாண்டின் உலகின் குறிப்பிடத்தக்க தேவையாகும். அனைவரையும் உள்ளடக்கிய எரிசக்தி மாற்றத்திற்கு டிரில்லியன் கணக்கான டாலர்கள் தேவை. இயற்கையாகவே, வளர்ந்த நாடுகள் இதில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன.
இந்த ஆண்டு, 2023 ஆம் ஆண்டில், வளர்ந்த நாடுகள் ஒரு சாதகமான முன்முயற்சியை எடுத்ததில் இந்தியாவுடன், உலகளாவிய தெற்கில் உள்ள அனைத்து நாடுகளும் மகிழ்ச்சியடைகின்றன. வளர்ந்த நாடுகள் முதல் முறையாக பருவநிலை நிதிக்காக 100 பில்லியன் டாலர் என்ற தங்கள் உறுதிப்பாட்டை நிறைவேற்ற விருப்பம் தெரிவித்துள்ளன.
'பசுமை மேம்பாட்டு ஒப்பந்தத்தை' ஏற்றுக்கொள்வதன் மூலம், நிலையான மற்றும் பசுமை வளர்ச்சிக்கான தனது உறுதிப்பாட்டை ஜி -20 மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
நண்பர்களே,
கூட்டு முயற்சியின் உத்வேகத்துடன், இன்று, இந்த ஜி -20 மேடையில் இந்தியாவுக்கு சில பரிந்துரைகள் உள்ளன.
எரிபொருள் கலப்புத் துறையில் அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது இன்றைய தேவையாகும். பெட்ரோலில் எத்தனால் கலப்பதை 20 சதவீதம் வரை கொண்டு செல்ல உலக அளவில் முயற்சி எடுப்பது எங்கள் திட்டம்.
அல்லது மாற்றாக, பெரிய உலகளாவிய நன்மைக்காக மற்றொரு கலப்பு கலவையை உருவாக்குவதில் நாம் பணியாற்றலாம், இது ஒரு நிலையான ஆற்றல் விநியோகத்தை உறுதி செய்கிறது, அதே நேரத்தில் காலநிலை பாதுகாப்பிற்கும் பங்களிக்கிறது.
இந்த சூழலில், இன்று, உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணியை தொடங்குகிறோம். இந்த முயற்சியில் இணையுமாறு இந்தியா உங்கள் அனைவரையும் அழைக்கிறது.
நண்பரக்ளே,
சுற்றுச்சூழலை மனதில் கொண்டு, கார்பன் கிரெடிட் குறித்த விவாதங்கள் பல தசாப்தங்களாக நடந்து வருகின்றன. கார்பன் கிரெடிட் என்ன செய்யக்கூடாது என்பதை வலியுறுத்துகிறது; இது ஒரு எதிர்மறை கண்ணோட்டத்தைக் கொண்டுள்ளது.
இதன் விளைவாக, என்ன சாதகமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், பெரும்பாலும் போதுமான கவனம் பெறுவதில்லை. நேர்மறையான முயற்சிகளுக்கு ஊக்கம் இல்லை.
கிரீன் கிரெடிட் நமக்கு முன்னோக்கிய வழியைக் காட்டுகிறது. இந்த நேர்மறையான சிந்தனையை ஊக்குவிக்க, ஜி -20 நாடுகள் 'பசுமை கடன் முன்முயற்சி'யில் செயல்படத் தொடங்க வேண்டும் என்று நான் முன்மொழிகிறேன்.
நண்பர்களே,
இந்தியாவின் சந்திரயான் திட்டத்தின் வெற்றியை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். அதிலிருந்து பெறப்படும் தரவுகள் மனிதகுலம் முழுமைக்கும் பயனளிக்கும். அதே உத்வேகத்துடன், 'சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை கண்காணிப்புக்கான ஜி 20 செயற்கைக்கோள் மிஷன்' ஏவ இந்தியா முன்மொழிகிறது.
இதிலிருந்து பெறப்படும் பருவநிலை மற்றும் வானிலை தரவுகள் அனைத்து நாடுகளுடனும், குறிப்பாக உலகளாவிய தெற்கு நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளப்படும். இந்த முயற்சியில் இணையுமாறு அனைத்து ஜி-20 நாடுகளுக்கும் இந்தியா அழைப்பு விடுக்கிறது.
நண்பர்களே,
மீண்டும் ஒருமுறை, உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த வரவேற்பும் வாழ்த்துகளும்.
இப்போது, உங்கள் எண்ணங்களைக் கேட்க ஆவலாக இருக்கிறேன்.
பொறுப்பு துறப்பு - இது பிரதமர் அறிக்கையின் தோராயமான மொழிபெயர்ப்பு ஆகும். அசல் அறிக்கை இந்தியில் வழங்கப்பட்டது.
We have to move ahead with a human centric approach. pic.twitter.com/0GhhYD5j7o
— PMO India (@PMOIndia) September 9, 2023
Mitigating global trust deficit, furthering atmosphere of trust and confidence. pic.twitter.com/Yiyk5f7y9j
— PMO India (@PMOIndia) September 9, 2023
India has made it a 'People's G20' pic.twitter.com/PpPGBdXn8C
— PMO India (@PMOIndia) September 9, 2023