பிரதமர் திரு நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த பல்வேறு முக்கிய ஆளுமைகளை சிட்னியில் இன்று (23.05.2023) தனியே சந்தித்தார்.அந்த முக்கிய ஆளுமைகள் :
- இயற்பியலில் நோபல் பரிசு பெற்றவரும், கேன்பராவில் உள்ள ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரும் தலைவருமான பேராசிரியர் ப்ரையன் பி ஷ்மிட்.
- வணிக நிபுணரும், மனித நேய விவகாரங்களில் ஆர்வமுடைய பேச்சாளருமான திரு மார்க் பல்லா
- பழங்குடியினக் கலைஞர் திருமதி டேனியல் மேட் சுல்லிவன்
- சர்வதேச உணவுக் கலைஞரும், உணவக நிறுவனரும், தொலைக்காட்சி நிகழ்ச்சி நடத்துபவரும், பேச்சாளரும், தொழில்முனைவோருமான திருமதி சாரா டாட்
- சிட்னியில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் செயற்கை நுண்ணறிவுக் கழகத் தலைமை விஞ்ஞானி பேராசிரியர் டோபி வால்ஷ்
- சமூகவியலாளரும், ஆராய்ச்சியாளரும், எழுத்தாளரும், இணை பேராசிரியருமான சால்வேட்டோர் பாபோன்ஸ்
- ஆஸ்திரேலிய முன்னணிப் பாடகர் திரு கய் தியோடர் செபாஸ்டியன்
பிரதமர் அவர்களுடைய சாதனைகளுக்காக வாழ்த்துத் தெரிவித்து இந்தியா - ஆஸ்திரேலியா நட்புறவை வலுப்படுத்துவதில் பங்களிக்குமாறு ஊக்கப்படுத்தினார்