2023 மே 21 அன்று ஹிரோஷிமாவில் ஜி7 உச்சிமாநாட்டிற்கிடையே மேன்மை தங்கிய இங்கிலாந்து பிரதமர் திரு ரிஷி சுனக்கை பிரதமர் திரு நரேந்திர மோடி சந்தித்தார்.
இந்தியா-இங்கிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தையின் முன்னேற்றம் உட்பட தங்களின் விரிவான உத்திகள் வகுத்தல் மற்றும் பங்களிப்பை இரு தலைவர்களும் ஆய்வு செய்தனர்.
வர்த்தகம் & முதலீடு, அறிவியல் & தொழில்நுட்பம், உயர்கல்வி, மக்களிடையேயான உறவு போன்ற விரிவான பகுதிகளில் ஒத்துழைப்பை ஆழப்படுத்த இந்தத் தலைவர்கள் ஒப்புக்கொண்டனர்.
இந்தியாவின் தற்போதைய ஜி20 தலைமைத்துவமும் இந்த விவாதங்களில் இடம்பெற்றன. புதுதில்லியில் ஜி20 உச்சிமாநாட்டிற்கு சுனக்கை வரவேற்பதைப் பிரதமர் எதிர்நோக்கியுள்ளார்.
The meeting with PM @RishiSunak was a very fruitful one. We discussed boosting cooperation in trade, innovation, science and other such sectors. pic.twitter.com/FI9nI1gc9V
— Narendra Modi (@narendramodi) May 21, 2023