இத்தாலியின் அபுலியாவில் ஜி-7 உச்சிமாநாட்டிற்கு இடையே இத்தாலியக் குடியரசின் பிரதமர் திருமதி ஜார்ஜியா மெலோனியுடன், திரு நரேந்திர மோடி இருதரப்பு சந்திப்பை நடத்தினார். 3-வது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு, திருமதி மெலோனி வாழ்த்துத் தெரிவித்தார். ஜி-7 உச்சிமாநாட்டில் பங்கேற்க தமக்கு அழைப்பு விடுத்த இத்தாலிப் பிரதமர் திருமதி மெலோனிக்கு நன்றி தெரிவித்த திரு மோடி, வெற்றிகரமான உச்சிமாநாட்டின் நிறைவுக் குறித்து பாராட்டு தெரிவித்தார்.
இந்தியா – இத்தாலி இடையே உத்திப்பூர்வ பங்களிப்பின் முன்னேற்றத்தை ஆய்வு செய்த இரு தலைவர்களும் தொடர்ச்சியான உயர்நிலை அரசியல் பேச்சுவார்த்தை குறித்து இருதலைவர்களும் திருப்தி தெரிவித்தனர். வளர்ந்து வரும் வர்த்தகப் பொருளாதார ஒத்துழைப்புக் குறித்து மகிழ்ச்சி தெரிவித்த நிலையில், தூய்மை எரிசக்தி, விண்வெளி, தொலை தகவல் தொடர்பு, செயற்கை நுண்ணறிவு போன்றவற்றில் வர்த்தக உறவுகளை விரிவுபடுத்தவும் அவர்கள் அழைப்பு விடுத்தனர். இந்தச் சூழலில் காப்புரிமை, வடிவமைப்பு, வணிகச்சின்னம் ஆகியவற்றில் ஒத்துழைப்புக்கான கட்டமைப்பை வழங்குகின்ற தொழில்துறை சொத்துரிமைகள் குறித்து அண்மையில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இருவரும் வரவேற்றனர்.
சுதந்திரமான மற்றும் வெளிப்படையான இந்திய பசிபிக் குறித்த தங்களின் பகிரப்பட்ட கண்ணோட்டத்தை நிறைவேற்றும் இந்தியா – பசிபிக் பெருங்கடல் முன்முயற்சித் திட்டத்தின் கீழ் அமலாக்கப்பட உள்ள கூட்டு நடவடிக்கைகளை இரு தலைவர்களும் எதிர்நோக்கியுள்ளனர். பிராந்திய மற்றும் உலகளாவிய முக்கியப் பிரச்னைகள் குறித்தும் விவாதித்த அவர்கள், இந்தியா- மத்தியக் கிழக்கு – கிழக்கு ஐரோப்பிய பொருளாதார வழித்தடம் உள்ளிட்ட உலகளாவிய நிலைமை மற்றும் பலதரப்பு முன்முயற்சிகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் ஒப்புக்கொண்டனர்.
Had a very good meeting with PM @GiorgiaMeloni. Thanked her for inviting India to be a part of the G7 Summit and for the wonderful arrangements. We discussed ways to further cement India-Italy relations in areas like commerce, energy, defence, telecom and more. Our nations will… pic.twitter.com/PAe6sdNRO9
— Narendra Modi (@narendramodi) June 14, 2024
Ho avuto un ottimo incontro con la PM @GiorgiaMeloni. L'ho ringraziata per aver invitato l'India a partecipare al G7 e per la meravigliosa organizzazione. Abbiamo discusso di come rafforzare le relazioni Italia-India in settori quali commercio, energia, difesa, telecomunicazioni… pic.twitter.com/ObB3ppTQiX
— Narendra Modi (@narendramodi) June 14, 2024