பாலியில் நடைபெறும் ஜி-20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாட்டுக்கு இடையே, பிரதமர் திரு நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் திரு. ஜோசப் ஆர் பைடனும் சந்தித்துப் பேசினர்.
முக்கியமான மற்றும் வளர்ந்து வரும் எதிர்காலத் தொழில்நுட்பங்களான, மேம்பட்ட கணினி தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது உட்பட இந்தியா - அமெரிக்கா இடையே உத்திசார் கூட்டு செயல்பாட்டை தொடர்ந்து அதிகரிப்பது தொடர்பாக அவர்கள் ஆய்வு செய்தனர். குவாட், ஐ2யூ2 போன்ற புதிதாக அமைக்கப்படும் நாடுகளின் குழுக்களில் இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையில் நெருக்கமான ஒத்துழைப்பு ஏற்பட்டிருப்பது குறித்து அவர்கள் திருப்தி தெரிவித்தனர்.
இரு தலைவர்களும் உலகளாவிய மற்றும் பிராந்திய விவகாரங்களில் முன்னேற்றங்கள் குறித்து விவாதித்தனர். இந்தியா-அமெரிக்கா இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அமெரிக்க அதிபர் திரு ஜோ பைடனுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார். இந்தியாவின் ஜி-20 தலைவர் பொறுப்பின் போது இரு நாடுகளும் நெருக்கமான ஒருங்கிணைப்பை தொடர்ந்து பராமரிக்கும் என்றும் பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.