பிரதமர் திரு. நரேந்திர மோடி 23 ஆகஸ்ட் 2023 அன்று ஜொகன்னஸ்பர்கில் 15 வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் போது தென்னாப்பிரிக்க அதிபர் திரு சிரில் ராமபோசாவை சந்தித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்த இரு தலைவர்களும், பாதுகாப்பு, வேளாண்மை, வர்த்தகம் மற்றும் முதலீடு, சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் மக்களுக்கு இடையிலான உறவுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து திருப்தி தெரிவித்தனர்.
பலதரப்பு அமைப்புகளில் தொடர்ச்சியான ஒருங்கிணைப்பு மற்றும் பரஸ்பர நலன்களின் பிராந்திய மற்றும் பலதரப்பு பிரச்சனைகள் குறித்தும் இரு தரப்பினரும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். இந்தியாவின் ஜி 20 தலைமைப் பதவிக்கு முழு ஆதரவைத் தெரிவித்த அதிபர் திரு ராமபோசா, ஆப்பிரிக்க ஒன்றியத்திற்கு ஜி -20 இன் முழு உறுப்பினர் உரிமையை வழங்குவதற்கான இந்தியாவின் முன்முயற்சியைப் பாராட்டினார். ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக புதுதில்லிக்கு வருகை தர ஆவலாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.
பிரிக்ஸ் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்காக அதிபர் திரு ராமபோசாவுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார். பரஸ்பர வசதியான நாளில் தென்னாப்பிரிக்காவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்ளுமாறு அதிபர் ராமபோசா விடுத்த அழைப்பை பிரதமர் ஏற்றுக்கொண்டார்.
Had an excellent meeting with President @CyrilRamaphosa. We discussed a wide range of issues aimed at deepening India-South Africa relations. Trade, defence and investment linkages featured prominently in our discussions. We will keep working together to strengthen the voice of… pic.twitter.com/xhxEClr1Dl
— Narendra Modi (@narendramodi) August 23, 2023