போர்ட் மோர்ஸ்பியில் உள்ள அரசு இல்லத்தில் இந்தியா-பசிஃபிக் தீவுகளின் ஒத்துழைப்புக்கான அமைப்பின் மூன்றாவது உச்சிமாநாட்டிற்கிடையே 2023, மே 22 அன்று பப்புவா நியூ கினியாவின் கவர்னர் ஜென்ரல் சர் பாப் டாடேயைப் பிரதமர் திரு நரேந்திர மோடி சந்தித்தார் .
இந்த நாட்டிற்கு முதல் முறையாகப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமரை கவர்னர் ஜென்ரல் அன்புடன் வரவேற்றார். இருதரப்பு உறவுகள் மற்றும், இரு நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பு மேம்பாட்டின் முக்கியத்துவம் உள்ளிட்ட கருத்துக்களை இருதலைவர்களும் பரிமாறிக்கொண்டனர். இவற்றை மேலும் வலுப்படுத்த இவர்கள் ஒப்புக்கொண்டனர்.
PM @narendramodi held talks with Papua New Guinea Governor General Sir Bob Dadae. pic.twitter.com/srTk63bPQS
— PMO India (@PMOIndia) May 21, 2023