வாஷிங்டன் டிசியில் ஜூன் 23, 2023 அன்று அமேசான் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி திரு. ஆண்ட்ரூ ஆர். ஜஸ்ஸியைப் பிரதமர் திரு நரேந்திர மோடி சந்தித்தார்.
பிரதமரும் திரு. ஜஸ்ஸியும் இ-வணிகம் குறித்து விவாதித்தனர். இந்தியாவின் சரக்குப் போக்குவரத்துத் துறையில் அமேசானுடன் மேலும் ஒத்துழைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் அவர்கள் விவாதித்தனர்.
இந்தியாவில் எம்எஸ்எம்இ-களின் டிஜிட்டல் மயமாக்கலை ஊக்குவிக்கும் அமேசானின் முயற்சியைப் பிரதமர் வரவேற்றார்.