அமெரிக்காவின் பல்வேறு முன்னணி சிந்தனையாளர்களை பிரதமர் திரு நரேந்திர மோடி, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் சந்தித்துப் பேசினார்.
வளர்ச்சி, புவி அரசியல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பிரதமரும், நிபுணர்களும் விவாதித்தனர்.
அமிர்த காலத்தில் மாற்றத்தை நோக்கிச் செல்லும் இந்தியாவிற்கு வருகை தருமாறு பிரதமர் அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
இந்த விவாதத்தில் பங்கேற்ற பல்வேறு சிந்தனையாளர்கள் விவரம்:
- நியூயார்க்கில் உள்ள வெளியுறவு கவுன்சிலின் தலைவரும் மதிப்பிற்குரியவருமான திரு மைக்கேல் ஃப்ரோமேன்.
- நியூயார்க்கில் உள்ள ஆசிய சமூகக் கொள்கை கழகத்தில் சர்வதேச பாதுகாப்பு மற்றும் பிரதிநிதித்துவத்தின் துணைத்தலைவர் திரு டேனியல் ரசல்.
- பாஸ்டனில் உள்ள நார்த் ஈஸ்டர்ன் பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறை இணை பேராசிரியர் டாக்டர் மேக்ஸ் ஆப்ரஹாம்ஸ்.
- வாஷிங்டனில் உள்ள ஆசிய படிப்பக மையம், பாரம்பரிய அறக்கட்டளையின் இயக்குநர் திரு ஜெஃப் எம் ஸ்மித், வாஷிங்டனில் உள்ள ‘தி மாரத்தான் இனிஷியேட்டிவ்’ இணை நிறுவன திரு எல்பிரிட்ஜ் கால்பி.
- டெக்சாசில் உள்ள இண்டஸ் சர்வதேச ஆராய்ச்சி அறக்கட்டளையின் இயக்குநரும், நிறுவனர் உறுப்பினருமான திரு குரு சவ்லே.