அமெரிக்காவின் நியூயார்க்கில் பிரபல அமெரிக்க கல்வியாளர்களைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சந்தித்தார். இந்தக் கல்வியாளர்கள், வேளாண்மை, சந்தைப்படுத்துதல், பொறியியல், சுகாதாரம், அறிவியல் தொழில்நுட்பம் உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள்.
இந்தியாவின் புதிய கல்விக் கொள்கையின் கீழ் ஆராய்ச்சி ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல், கல்வி சார்ந்த இருவழிப் பரிமாற்றங்கள் ஆகியவற்றின் சாத்தியக்கூறுகள் பற்றி இவர்கள் விவாதித்தனர்.
தங்களின் துறை சார்ந்த நிபுணத்துவம் குறித்து கண்ணோட்டங்கள் மற்றும் அனுபவங்களைப் பிரதமருடன் கல்வியாளர்கள் பகிர்ந்து கொண்டனர்.
இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்ற கல்வியாளர்கள் பற்றிய விவரம்:
- திருமதி சந்திரிகா டாண்டன், நியூயார்க் பல்கலைக்கழக டாண்டன் பொறியியல் பள்ளியின் வாரியத் தலைவர்.
- டாக்டர் நீலி பெண்டாபுடி, பென்சில்வேனியா மாநிலப் பல்கலைக்கழகத் தலைவர்.
- டாக்டர் பிரதீப் கோஸ்லா, சான்டியோகோவில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் வேந்தர்.
- டாக்டர் சதீஷ் திரிபாதி, பஃபலோவில் உள்ள பல்கலைக்கழகத்தின் தலைவர்.
- பேராசிரியர் ஜக்மோகன் ராஜூ, பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் வார்ட்டன் வணிகப்பள்ளியின் சந்தைப்படுத்துதல் துறை பேராசிரியர்.
- டாக்டர் மாதவ் வி.ராஜன், சிகாகோ பல்கலைக்கழகத்தின் வணிகத்திற்கான பூத் பள்ளியின் டீன்.
- பேராசிரியர் ரத்தன் லால், நில அறிவியலில் புகழ் பெற்ற பல்கலைக்கழகப் பேராசிரியர்; ஓஹியோ மாநிலப் பல்கலைக்கழகத்தில் கார்பன் நிர்வாகம் மற்றும் முறைப்படுத்தலுக்கான ரத்தன் லால் மையத்தின் இயக்குநர்.
- டாக்டர் அனுராக் மரியாள், ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் இதய நாள மருத்துவத் துறையின் உதவிப் பேராசிரியர், ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் புதிய கண்டுபிடிப்பு மற்றும் உலகளாவிய மையத்தில் பேராசிரியர் மற்றும் தொழில்நுட்பக் கண்டுபிடிப்பு மற்றும் தாக்கம் குறித்த ஆய்வுத் தலைவர்.