நீர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை பிரதமர் மோடி எப்போதும் வலியுறுத்தி வருகிறார். ஜல் ஜீவன் இயக்கம், தூய்மை இந்தியா இயக்கம், ஜல் சக்தி திட்டம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை இயக்கம் போன்ற முன்முயற்சிகள் இதற்கு சான்றாக உள்ளன.
குஜராத் மாநிலத்தின் நீர்நிலைகளை மீட்டெடுப்பதற்கும் புத்துயிர் பெற செய்வதற்கும், அந்த மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த மோடி 'ஜல் மந்திர்' (நீர் ஆலயம்) என்ற கருத்தை உருவாக்கியதை குஜராத் அரசின் ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரி எச்.எஸ்.சிங் விவரித்தார். குஜராத்தில் 18,000 க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. ஒவ்வொரு கிராமத்திலும் ஒன்று முதல் ஐந்து குளங்கள் உள்ளன என்பதால், குளங்களைச் சுற்றியுள்ள பகுதிகளின் முறையாக மரங்களை நடுவதற்கு ஏதுவாக அவை அழகுபடுத்தப்பட வேண்டும் என்று முதலமைச்சராக இருந்த மோடி பரிந்துரைத்தார். நீர்நிலைகள் கிராமங்களின் ஆழமான கலாச்சார முக்கியத்துவத்தைக் கொண்டிருப்பதால், முதலமைச்சராக இருந்த மோடி மாநிலத்தில் உள்ள நீர்நிலைகளைப் பராமரிக்கவும் புதுப்பிக்கவும் 'ஜல் மந்திர்' என்ற ஒரு பயனுள்ள செயல்முறையை கற்பனை செய்து செயல்படுத்தினார். இது, கலாச்சார மறுசீரமைப்பு, பறவைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான ஆதரவு, பொழுதுபோக்கு சுற்றுலா மற்றும் அடிமட்ட அளவில் நீர் சேமிப்பிற்கு வழிவகுப்பதாக அமைந்தது.
CM Narendra Modi introduced the groundbreaking 'Jal Mandir' concept in Gujarat, a visionary approach to rejuvenate water bodies. Dive into the details by watching this #ModiStory! pic.twitter.com/jQj9oIhvJd
— Modi Story (@themodistory) September 13, 2023