கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்த ஆண்டு கவுரத்திற்குரிய நாடாக இந்தியா பங்கேற்பது குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இந்திய சுதந்திரத்தின் 75 வது ஆண்டு விழாவும் கேன்ஸ் திரைப்பட விழாவின் 75 வது ஆண்டு விழாவும் இந்தியா –பிரான்ஸ் இடையேயான தூதரக உறவுகளின் 75 ஆவது ஆண்டும் ஒருங்கிணையும் தருணத்தில் இந்தியாவின் பங்கேற்பு அமைந்துள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
உலகில் மிக அதிக எண்ணிக்கையில் திரைப்படங்களை தயாரிக்கும் நாடு என்ற நிலையில் உள்ள இந்தியா திரைப்பட துறையில் குறிப்பிடத்தக்க விசித்திரங்களை கொண்டுள்ளது என்றும் வளமான பாரம்பரியமும், பன்முக கலாச்சாரமும் நமது பலம் என்றும் பிரதமர் கூறினார்.
திரைப்படத்துறையில் வணிகத்தை எளிதாக்க இந்தியாவின் உறுதிப்பாட்டை வலியுறுத்திய திரு நரேந்திரமோடி சர்வதேச ரீதியில் கூட்டு தயாரிப்பை ஒற்றை சாளர முறையில் உறுதி செய்திருப்பதை சுட்டிக்காட்டினார். உலகின் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு தடையில்லா வாய்ப்புகளை இந்தியா வழங்குகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.சத்தியஜித் ரேயின் நூற்றாண்டை இந்தியா கொண்டாடும் நிலையில், அவரது திரைப்படம் கேன்ஸ் விழாவில் தொன்மையான திரைப்படங்கள் பிரிவில் திரையிடப்படுவதற்கும் பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.