பட்டயக் கணக்காளர்கள் தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அனைத்து பட்டயக் கணக்காளர்களுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். பட்டயக் கணக்காளர்களின் நிபுணத்துவம் மற்றும் உத்திசார் நுண்ணறிவு, வணிகங்கள் மற்றும் தனிநபர்களுக்கு பயனளிக்கின்றன என்றும், நமது பொருளாதார வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகின்றன என்றும் திரு மோடி தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
"பட்டயக் கணக்காளர்கள் தின வாழ்த்துகள்! நமது பொருளாதார நிலையை வடிவமைப்பதில் பட்டயக் கணக்காளர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். அவர்களின் நிபுணத்துவம் மற்றும் உத்திசார் நுண்ணறிவு, வணிகங்களுக்கும் தனிநபர்களுக்கும் ஒரே மாதிரியான பயன்களை வழங்குகின்றன. பொருளாதார வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மையில் அவர்கள் குறிப்பிடத்தக்க பங்காற்றுகின்றனர். அவர்கள் நமது நிதி நலனுடன் சமமாக ஒருங்கிணைந்திருக்கிறார்கள். #CADay"
Happy Chartered Accountants Day! CAs play a vital role in shaping our economic landscape. Their expertise and strategic insights are beneficial for businesses and individuals alike. They also contribute significantly to economic growth and stability. They are equally integral to…
— Narendra Modi (@narendramodi) July 1, 2024