இந்தியா வந்துள்ள ஐ.நா.சபையின் 77-வது தலைவர் திரு.எச்.இ. சாபா கொரோஷியை பிரதமர் திரு.நரேந்திர மோடி வரவேற்றுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
“முதல் முறையாக இந்தியாவிற்கு வந்துள்ள ஐ.நா. சபையின் 77-வது தலைவர் திரு.எச்.இ. சாபா கொரோஷியை இன்று மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். ஐநா உட்பட பலதரப்புவாதத்திற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியது. நாங்கள் இருவரும் சர்வதேச அளவிலான நீர்வள ஆதாரங்களைப் பாதுகாப்பது குறித்து ஆலோசித்தோம். அதே போல் ஜி.20 இந்தியாவின் தலைமைத்துவத்திற்கு ஆதரவளிக்கும் ஐ.நா தலைவரை வரவேற்கிறேன்.”.
Happy to welcome @UN_PGA Csaba Kőrösi on his first visit to India. Reaffirmed India's commitment to multilateralism, including at the UN. We discussed the importance of conserving and optimising global water resources. Welcomed his support for #G20India. pic.twitter.com/nLbLv1rYtg
— Narendra Modi (@narendramodi) January 30, 2023