ஃபிரான்ஸ் அதிபர் திரு இம்மானுவேல் மேக்ரனைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வரவேற்றார்.
நாளை நடைபெறும் குடியரசு தின விழாவில் அவர் பங்கேற்பது மிகவும் பெருமைக்குரியது என்று பிரதமர் கூறியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
"எனது நண்பர் அதிபர் இம்மானுவேல் மேக்ரன் அவர்களை, இந்தியாவுக்கு வரவேற்கிறோம்.
வளமான கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் திறமையான மக்கள் நிறைந்த ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து அதிபர் திரு மேக்ரன் தனது இந்தியப் பயணத்தைத் தொடங்குவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். தில்லியில் நாளை (ஜனவரி 26) நடைபெறும் குடியரசு தின விழாவில் அவர் பங்கேற்கிறார் என்பது பெருமிதம் அளிக்கிறது. அவரது வருகை நமது நாடுகளுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்துவது மட்டுமின்றி, நட்பு மற்றும் ஒத்துழைப்பின் நமது பகிரப்பட்ட வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க அத்தியாயத்தை சேர்க்கிறது”.
Welcome to India, my friend President @EmmanuelMacron.
— Narendra Modi (@narendramodi) January 25, 2024
I am happy that President Macron begins his India visit from Jaipur in Rajasthan, a land with rich culture, heritage and talented people. It is a matter of great pride that he will be taking part in our Republic Day… pic.twitter.com/Q7JGuZpJJP
Bienvenue en Inde, mon ami le Président @EmmanuelMacron
— Narendra Modi (@narendramodi) January 25, 2024
Je suis heureux que le Président Macron commence sa visite de l'Inde à Jaipur, au Rajasthan, un état riche de sa culture, de son patrimoine et de son peuple talentueux. C'est une grande fierté pour nous qu'il prenne part… pic.twitter.com/1fkTNT4YiS